பக்கம்:காணிக்கை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 "சின்ன அம்மா என்ற அழகான பதவியை அவளுக்கு முரளி தந்து அழகு பார்த்தான். 'சின்ன அம்மா, நீ அம்மா கிட்டே பேசமாட்டியா?" என்று கேட்பான். அவன் அம்மா அதைக் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டாள், எல்லாம் இந்த மதுவால்தான் வந்தது என்பது அவள் கொண்ட முடிவு. என்றலும் அவள் உறங்கிலுைம் இரவு பகல் கண்விழித்துக் கொண்டு அவனைக் கவனித்து வந்தாள். அவளே பத்துவிடம் வலியப் பேசுவாள். பெற்றதாய் படும் வேதனையை அவள் அறிந்தவளாக விளங்கிள்ை. நிச்சயமாக அவளுக்கு அடித்தது யார் என்று தெரிந் திருந்தால் அவள் கண்ணகியாக மாறி இருப்பாள். கள்வனே என் கணவன் என்று கூறினுள் அந்தக் கண்ணகி. "என் மகன் என்ன குற்றம் செய்தான்' என்று கதறி ஞள் பத்மினி. 'அடபாவிகளா' என்று ஆள் தெரியாமல் அவள் அங்கலாய்த்தாள். இந்தச் சொல் எப்பொழுது சொன்னுள். அவன் இனிப் பிழைக்கமாட்டான் என்ற நிலைமை ஏற்பட்டபிறகு. அப்பொழுதுதான் இரண்டு கைகளிலும் விலங்கிட்டு ஒரு முரடனைப் போலீசார் பிடித்து வந்தனர். அவனை எங்கேயோ பார்த்த நினைவு. திடீர் என்று தன் நிலை இழந்தாள் மது. தன் இடுப்பில் செருகி இருந்த கத்தியால் அவனைக் குத்தச் சென்ருள். அவள் அவனே அடையாளம் கண்டு கொண்டாள். "யார் இவன்தான உன்னே’’ 'இல்லை. முரளியைக் கல்லால் அடித்தது' என்ருள். "எப்படித் தெரியும்" கா - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/118&oldid=786828" இலிருந்து மீள்விக்கப்பட்டது