பக்கம்:காணிக்கை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

சமுதாயம் மதிப்புத் தருகிறது என்பது அர்த்தம். இது வெறும் தொழிலாளி மட்டும் அல்ல; இந்த நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனும் மதிக்கத் தகுந்தவன் என்பது அந்த உழைப்பால் தான் இந்த அதி அற்புதமான உலகம் படைக்கப்படுகிறது. கடவுள் காடு மேடு மலை ஆறு என்ற அடிப்படைப் பொருள்களைக் கொடுத்தான். மனிதன் இவற்றைக்கொண்டு அதி அற்புதமான வாழ்க்கையைப்படைத்தான். இது மனிதனின் வெற்றி.” என்று கூறினாள்.

அவள் கொஞ்சம் படித்தவள். என்னைவிட அதிகம் படித்தவள். கல்லூரிக் கட்டிடத்தை எட்டிப் பார்த்தவள். நான் தூர இருந்து வேடிக்கை பார்த்தவன். நிழலுக்குக் கூட அங்கே இருக்கவிரும்பாதவன். ஏன் அப்படி என்று கேட்கிறீர்களா?

எனக்கு மற்றவர்கள் சொல்லிக் கொடுத்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் பிடிப்பு இல்லை. சுயசிந்தனை இருக்க வேண்டும் என்று நினைக்கிறவன். அதனால் கூடத் தான் என்னை அரைப்பயித்தியம் என்றர்கள்.

நீங்களே சொல்லுங்கள். படித்தால் நான் எப்படி முன்னுக்கு வந்து இருக்க முடியும். வேண்டுமானால் கொஞ்சம் விஷயம் அறிந்தவனாக இருக்கலாம். சும்மா 'டிக்கிரி'ஒன்று வாங்கி மாட்டி வைத்திருக்கலாம். யார் இப்ப இதை மதிக்கிறார்கள். பணம் இருக்கிறதா என்று தான் பார்க்கிறர்கள். எங்க அப்பன் கொஞ்சம் அறிவாளி. எனக்காக இந்த உலகத்தில் விட்டு வைத்த சொத்து அது தான் என்னைக் காப்பாற்றுகிறது. காப்பாற்றியது. அதை நம்பித்தான் என் மனைவி என் வீட்டில் குடி இருக்கிறாள். அதாவதுகுடித்தனம் செய்கிறாள். குடியும் குடித்தனமுமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்க அப்பா வைத்து விட்டுப் போன 'பெட்ரோல் பங்க்' என் பேரில் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/15&oldid=1321111" இலிருந்து மீள்விக்கப்பட்டது