பக்கம்:காணிக்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இருக்கிறது. அதுதான் என்னைக் காப்பாற்றுகிறது. அதுசரி என்னைப் போல எல்லா அப்பனும் சொத்து வைத்து விட்டுப் போனால் நன்றாகத்தானே இருககும். அது எப்படி முடியும்?

எனக்கு அந்த ‘பங்கு’ அங்கே உட்காரப் பிடிக்காது. இது என்ன ஒரு தொழிலா? யாரோ வேலை செய்கிறார்கள். யாரோ சம்பாதிக்கிறார்கள். நான் ‘முதலாளி’.இப்படித்தான் என்னைப் பற்றி அங்கே சொல்லிக் கொள்கிறார்கள். விசித்திரமான உலகம் இது. அதாவது என் அப்பன் எனக்காக விட்டு வைத்த தொழில். நான் ஒரு குட்டி முதலாளி. என் கீழே ஒரு கணக்குப் பிள்ளை. எடுபிடி ஆட்கள் வேகமாக ஒட ஆட ஒரு ஸ்கூட்டர்.

அதிலே தான் அவளுக்கும் எனக்கும் சிநேகிதமே ஏற்பட்டது. அது எப்படி ஏற்பட முடியும். பின்னாலே உட்காருகிறவர்கள் எல்லாம் உறவுக்காரர்கள் என்று தானே நினைக்கிறீர்கள். அது தான் இல்லை.உறவு கொள்ள வேண்டியவர்கள். கொள்ள நினைக்கிறவர்கள். சில சமயம் தொடராமல் அறுந்து விடுகிறவர்கள்.

நான் நினைத்தது உண்டு பின்னால் உட்காருகிறவர்கள் எல்லாம் அவரவர் துணைவியராகத்தான் இருக்க வேண்டும் என்று.

நான் கூட 'ஸ்கூட்டர்’ வாங்குவதற்கு முன்னால் இப்படிப்போகிறவர்களைப் பார்த்து ரசித்ததுஉண்டு.தெருவுக்கு அழகு ஸ்கூட்டர்தான், அப்பொழுது எல்லாம் எனக்குக் கலியாணம் ஆகவில்லை. நம் பின்னாலே யார் உட்காருவார்கள் என்று நினைப்பது உண்டு. அதற்கப்புறம் தான் இந்த ஸ்கூட்டருக்கே கிராக்கி ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

எங்க அப்பா உயிரோடு இருக்கிற வரையில் எனக்கு ஸ்கூட்டரே வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லி விட்டார். ஏன்? இந்த முட்டாள் பயல்கள் பலபேரு அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/16&oldid=1321118" இலிருந்து மீள்விக்கப்பட்டது