பக்கம்:காணிக்கை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

நான் தத்துவம் பேசுகிறேன். பேசிப் பயன் இல்லை. இன்று எந்த நேரத்தில் எது நடக்குமோ அதைச் சொல்ல முடியவில்லை. அரசியல் அலைகள் ஓயாமல் கொந்தளித்துத் கொண்டே இருக்கின்றன. முன்னெல்லாம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறைதான் தேர்தல். இப்பொழுது ஒவ்வொரு நாளும் தேர்தலாக அமைந்து விட்டது.

'ஒழிக’ என்று கத்துவதன் அர்த்தம் என்ன? நாம் வாக்குத் தந்த அரசாங்கமே ஒழிக. என்று கத்துகிறோம். சட்டம் நாட்டை ஒழுங்குபடுத்துவது. அதையே மதிக்கவில்லை என்றால் பிறகு எப்படி எதைச் சாதிக்க முடியும்? சட்டத்தை இயற்றிபனால் மட்டும் போதாது. அதை நாம் மதிக்க வேண்டும். இது தான் இன்றைய பிரச்சனை.

அந்த உடைந்த ‘பஸ்'எங்கள் ‘பங்கின்' எதிரில் சோக வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருந்தது. ஒடிக் கொண்டிருந்த ஒட்டம் நின்று விட்டது.

அன்று 'சோ' என்று மழை பெய்து கொண்டிருந்தது. டாக்சி ஸ்ட்ரைக், ஆட்டோஸ்ட்ரைக், பஸ் மின்னல் வேக வேலை நிறுத்தம். அந்த மின்னல் கொடியாள் அவள் நடுத் தெருவில் நின்று விட்டாள். கடல் அலைகள் அவளுக்காக இரங்கி ஒ என்று கத்திக் கொண்டிருந்தது. கவுரவர் மத்தியில் அகப்பட்ட திரெளபதியாக அவள் இருந்தாள், துச்சாதனன் துகில் உரியும் நேரத்தில் என் ஸ்கூட்டர் நின்றது.அன்று அவளுக்குக் கண்ணனாக இருந்து காத்தேன். அவள் துகில் உரியப்படவிலலை. ‘பாஞ்சாலி சபதம்’ எப்பொழுதோ நடந்த கதையில்லை. அது அன்றாடம் நடக்கும் வாழ்க்கைப் பிரச்சனை என்பதை உணர்ந்தேன்.

அவள் ஸ்கூட்டரின் பின் உட்கார்ந்தாள்.

பேசிக் கொண்டே போனோம். இல்லை. ஸ்கூட்டர் போயிற்று, அதற்கு இவ்வளவு வேகம் கூடாது என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/21&oldid=1321137" இலிருந்து மீள்விக்கப்பட்டது