பக்கம்:காணிக்கை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

அப்பொழுது தான் உணர்ந்தேன். அதனால் நாங்கள் போனோம். மெதுவாகப்போனால் அது தள்ளாடித் தரையில் சாய்ந்து விடும்.

"எங்கே போக வேண்டும்?"

"விடுதிக்கு"

"இப்படியே தனியே”

“வரக் கூடாது. இன்று கல்லூரியில் நாடகம்”.

“என்ன நாடகம்”

“பாஞ்சாலி சபதம்”

“யார் நடித்தது?"

"திரெளபதி"

"அவள் சொந்தப் பெயர் ?

மறந்து விட்டது. அவள் திரெளபதியாகவே மாறி விட்டாள். அதனால் அந்த நினைப்பு என்னைவிட்டு அகலவில்லை.

"அந்த நாடகம்?"

"அது வெளியேயும் நடந்து விட்டது; நான் திரெளபதியாகி விட்டேன்”

"ஏன் அவர்கள் வழி மடக்கினார்கள்?"

"அவர்கள் ஒவ்வொருநாளும் இப்படித்தான் கிண்டல் செய்வார்கள். அதோ பாருடா அவளை என்பார்கள். சிலர் கண் சிமிட்டிக் கருத்தைத் தெரிவிப்பார்கள். சிலர் இந்தக் குட்டி என்று என்னை மிருகமாக நினைப்பார்கள்."

“நீ தனியாக”

“போவதில்லை. இப்படி ஸ்ட்ரைக் நடக்கும் என்று எப்படித் தெரியும்.”

“நான் வராவிட்டால்”

கா - 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/22&oldid=1321139" இலிருந்து மீள்விக்கப்பட்டது