பக்கம்:காணிக்கை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

அவள் தன் போட்டோவைக் கொடுத்தாள்.

அவள் ஏன் தன் படத்தை அந்த நேரத்தில் வைத்திருந்தாள். அது தெரியவில்லை.

அவள் பற்கள் மிக அழகாக இருந்தன. எனக்கு ஒரு சந்தேகம் அந்தப் பல்லால் முகத்துக்கு அழகு ஏற்பட்டதா அல்லது முகத்தால் அந்தப் பற்களுக்கு அழகு ஏற்பட்டதா தெரியவில்லை, அதை இன்னும் என்னால் முடிவு செய்யவே முடியவில்லை.

சிரிக்கும் பொழுது முகத்தில் மலர்ச்சி ஏற்படுகிறது. அந்த மலரின் நடுவில் அப்பற்கள் விளங்கும் பொழுது தான் அழகே உண்டாகிறது. பல்லுக்கு அழகு இல்லை. முகத்தால் தான் அழகு உண்டாகிறது என்பது அவளைப் பொறுத்தவரை உண்மையாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. அது பொதுப் படை நியதியாக வும் என்னால் கூறமுடியவில்லை.

அவள் பஸ் அட்டையைப் பற்றி விமரிசித்தது எனக்கு இன்னும் மறக்க முடியவில்லை, அதாவது அவளுக்குச் சமுதாய உணர்வு இருந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இது ஒரு புதிய செய்தியாக இருந்தது. இதுவரை வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று தான் பிரித்துக் காட்டினார்கள். இரண்டும் தனி மனிதன் அறமாகத் தான் தெரிந்தது. இதைவிடக் காதல் வீரம் என்பது எனக்குப் பிடித்து இருந்தது. இது தான் அகம் புறம் என்ற பாகுபாடு, இதில் குடும்ப உணர்வும் இருக்கிறது; சமுதாய உணர்வும் இருக்கிறது. இந்த இல்லறம் துறவறம் என்ற பாகு பாடு உப்பு சப்பு இல்லாத ஒன்றாகத் தெரிந்தது. நான் அதிகம் படிக்கவில்லை என்றாலும் எனக்குச் சுயசிந்தனை அதிகமாக எப்படியோ இருந்தது. இந்தப் பெட்ரோல் பங்க்கில் வேறு என்ன வேலை இருக்கிறது. வருகிற கார் எண்களைச் சில சமயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/28&oldid=1321273" இலிருந்து மீள்விக்கப்பட்டது