பக்கம்:காணிக்கை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

அவள் சொல்கிறாள். "அதுசரி அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. காலியாக இருந்த இடத்தில் ஆண்கள் உட்கார்ந்து விடுகிறார்கள். அந்த ஆண் அவர்களின் உறவுக்காரர்களாக இருந்தால் அந்தப்பெண் எழ வைப்பாளா? 'பரவாயில்லை, உட்காருங்க' என்று சொல்ல மாட்டாளா என்று கேட்டாள்.

அந்தப் பேச்சிலே எனக்குச் சுவாரசியம் ஏற்பட வில்லை.

எழுப்பக்கூடாதுதான். அவர்கள் நின்றுகொண்டு இடிபடுவதைவிட அவர்களை ஒதுக்குவது நல்லது என்று தான் பட்டது.

"இன்று பெண் ஆணாக மாறுகிறாள்" என்றாள்.

அது எனக்கு விளங்கவில்லை.

அடுத்துச் சொன்னாள் 'ஆண் பெண்ணுக மாறுகிறான்' என்றாள்.

"நீங்கள் கழுத்தில் செயின் ஏன் அணிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள்.

"அது மைனர் செயின்" என்று சொன்னேன்.

"அதுதான் சொல்கிறேன். நீங்கள் பெண்ணைப் போல் நகை அணிந்துகொண்டிருக்கிறீர்கள்."

மறுக்க விரும்பவில்லை.

நான் கொஞ்சம் மயிர்முடி வளர்த்து வைத்திருந்தேன்.

“நீங்கள் ஏன் மயிர்முடி வெட்டாமல் எங்களைப் போல”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/35&oldid=1321311" இலிருந்து மீள்விக்கப்பட்டது