பக்கம்:காணிக்கை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

"சே! இவள் பெண்தானா?” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

"என்ன பேசாமல் அசந்து விட்டீர்கள்" என்று கேட்டாள்.

“என்ன பேசுவது என்று தெரியவில்லை”.

"ஏதாவது படத்தைப் பற்றிப் பேசுங்களேன்”.

"பதினறு வயதில்”

"இந்த முப்பத்தாறு வயதில்” என்றாள்.

“இல்லை எல்லாரும் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே” என்றேன்.

அதாவது நான் என் ஆண் சினேகிதனோடு படம் பார்த்ததை உங்களால் ஜீரணிக்கமுடியவில்லை.இதுதானே உண்மை என்றாள்.

"ஆமாம்” என்றேன்.

நீங்கள் இந்த நகரத்து பஸ்களில் ஏறிப் பழக்கம். பெண்களை ஒதுக்கி வைக்கும் நாகரிகத்தை அங்கே கற்றுக்கொண்டீர்கள் என்று சொன்னாள்.

"ஏன் அது தப்பா” என்றேன்.

"இல்லை; உட்கார்ந்து இருக்கிற ஆண் பிள்ளைகளை இந்தப் பெண்கள் எழுப்பி இடம் கேட்கிறார்களே அது ரொம்பவும் அநாகரிகமாகப் படுகிறது.” என்றாள்.

“ஏன் இவர்களால் நிற்கமுடியும். அதை ஒரு உரிமையாகக் கேட்கும்பொழுது நான் அவர்களுக்காக வேதனைப் படுகிறேன்' என்று முடித்தாள்.

நான் இதை நினைத்துப் பார்த்ததே இல்லை.

“பெண்களுக்கு முதலிடம் தரவேண்டும்" என்று நினைத்து வந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/34&oldid=1321306" இலிருந்து மீள்விக்கப்பட்டது