பக்கம்:காணிக்கை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அவளுக்குக் கொஞ்சம் அவமானமாகப் போய் விட்டது.

“ஆக அந்தச் சுருக்குப் பைக்கும் கைப்பைக்கும் வித்தியாசமே இல்லை என்று சொல்கிறீர்களா?” என்றாள்.

"நாங்கள் என்ன உங்களைப் போல ஜேபியா வைத் திருக்கிறோம்" என்று கேட்டாள்.

அப்புறம் தான் விளங்கியது. முடியாது என்பது. ரசனை எனக்கு அறிவுறுத்தியது.

அவள் போனபின் நினைத்துப் பார்த்தேன். இது மேல் நாட்டுக் காப்பியா? இந்த நாட்டு அசலா என்று நினைத்துப் பார்த்தேன். இது மேல் நாட்டுச் சாயல் என்பதை முடிவு செய்துகொண்டேன்.

அவளே நினைக்கும் போது எல்லாம் அந்தப் பை அதில் இருந்து அவள் எடுத்துக் கொடுத்த முப்பது ரூபாய், தவறு மூன்று நோட்டுகள் என்னால் மறக்கவே முடியவில்லை.

"படிக்கிற பெண்ணுக்கு இவ்வளவு பணம் எதற்கு?"

"செலவு செய்ய” என்றாள்.

"தெரியும் எதுக்கு உனக்கு? யாருக்காகச் செலவு செய்யப் போகிருய்?"

"பெண்கள் கையில் கட்டாயம் பணம் இருக்க வேண்டும்.நான் சில சமயம் இதைப் போல என் ஆண் சினேகிதர்களோடு படம் பார்க்கப் போவது உண்டு. அவர்கள் காசு கொடுப்பதைத் தவிர்க்க” என்றாள்.

அவள் ஆண் சினேகிதர்களோடு படம் பார்க்கிறாள் என்று சொன்ன போது அவள் என் மதிப்பில் மிகவும் தாழ்ந்து விட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/33&oldid=1321303" இலிருந்து மீள்விக்கப்பட்டது