பக்கம்:காணிக்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

முதலில் சூப்' கொண்டு வந்து வைத்தார் அவர் வைக்கவில்லை. அவர் சொல்லி அந்த சர்வர் கொண்டு வந்து வைத்தான்.

“இதைச் சாப்பிடுங்கள்; நன்றாகப் பசி எடுக்கும்.” என்றார்.

குடித்த பிறகு தொடர்ந்து ஆர்டர் செய்து கொண்டே இருந்தார். நானும் ஒன்றும் சளைக்கவில்லை. ‘பில்’ அவர், கொடுக்க முன் வந்தார். அதை மட்டும் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அது என்னமோ மற்றவர்கள் எனக்காக பில் பணம் கொடுப்பது பிடிக்க வில்லை. அறுபத்தைந்து ரூபாய் கொடுத்தேன்.வாழ்க்கையில் இது என்னால் மறக்க முடியாத சம்பவம்.

இந்த நிகழ்ச்சி அன்று எனக்கு நினைவுக்கு வந்தது. இது 'பிரியாணி'ஹோட்டல் அல்ல;'பிரயாணி'ஹோட்டல். அதாவது வெளியூர்க்காரர்கள் வந்து தங்கி உண்ணும் உணவு விடுதி. எல்லாம் காய்கறிதான். சும்மா கட்லெட் ஐஸ்கரீம் காப்பி அவ்வளவு தான். முப்பது ரூபாயை எட்டிப் பிடித்தது. அன்று நான் பில் கொடுக்கவில்லை. அவள் தந்தாள். இதுவரை இந்த விஷயத்தில் யாருக்குமே இந்த வாய்ப்பைத் தந்தது இல்லை. அவளிடம் தோற்று விட்டேன். இதுவும் மறக்க முடியாத சம்பவமாகப் பட்டது.

அவள் கையில் தவறு,பையில் பணம் வைத்திருந்தாள்: எனக்கு ஒரு வியப்பு ஏற்பட்டது.

நான் சொன்னேன். 'பெண்கள் மாறவே இல்லையே' என்றேன்.

"எப்படி?” என்றாள்.

"இந்தச் சந்தைக் கடைகள் பார்த்திருக்கிறேன். அங்கே சுருக்குப் பை வாங்குவதை. கிழவிகள் தர்ன் வாங்குவார்கள்”.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/32&oldid=1321298" இலிருந்து மீள்விக்கப்பட்டது