பக்கம்:காணிக்கை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

‘திருமணம்’ என்பதன் அர்த்தத்தை அவள் விளக்கியதுபோல இருந்தது.

அன்று அந்தப் பொது விடுதியில் அது தான் அந்த ஒட்டலில் பில் முப்பது ரூபாயை எட்டிப் பிடித்தது.

பொதுவாக ‘பிரியாணி ஒட்டல்’ போயிருக்கிறேன். அங்கேதான் இப்படி பில் அதிகம் ஆவது உண்டு. ஒரு நாள் என் கிறித்துவப் பாதிரி நண்பரோடுபோயிருந்தேன். அவர் ரொம்பவும் நவீனமான மனிதர்.

அவர் அடிக்கடி எங்கள் பெட்ரோல் பங்கில் தான் வந்து பெட்ரோல் போடுவார். அவர் கழுத்தில் ஒரு சிலுவை தொங்கும். அதில் ஏசு நாதரின் உருவப்படம் கை விரித்துக் கிடக்கும். அது தான் சிலுவையில் அறையப் பட்ட படம், அவரைக் கேட்டேன். "நீங்கள் ஏன் இந்தப் படத்தைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு இருக்கிறீர்?"

அவர் அறுக்கத் தொடங்கினார்.

"ஏசு பாவ ரட்சகர்' என்றார்.

“நீங்கள் செய்யும் பாபங்களை அவர் மன்னித்து விடுகிறார்" என்றார்.

இவரும் நம்ம சாயிபாபா type, தான் போல் இருக்கிறது.

“நான் இருக்க பயமேன்?"

அந்தப் பரம்பரையைச் சார்ந்தவர் போல் இருக்கிறது.

அவரோடு ஒரு பிரியாணி ஓட்டலுக்குச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/31&oldid=1321291" இலிருந்து மீள்விக்கப்பட்டது