பக்கம்:காணிக்கை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

இன்று சமுதாய உறுதி இல்லை; எதிலும் எந்த உறுதியும் காண முடியாது யாரும் எதையும் கூற முடியாது. அவள் சொன்னாளே அதுதான் நினைவுக்கு வருகிறது. வன்முறை ஒரு பக்கம் அடக்கு முறை மறுபக்கம். இதுதான் இந்த நாட்டுப் பிரச்சனை. அதாவது பலபேருக்கு வேலை. கிடைக்கும். அந்த வாய்ப்புதான் உருவாகும். அதாவது போலீசு வேலை; நாட்டில் ஒழுங்கைக் காப்பது; அவ்வளவு தான், இப்படித்தான் வேலை இல்லாத் திண்டாட்டமே தீரப் போகிறது.

அவள் கேட்டாள் ‘நீங்கள் ஏன் இந்தச் செயின் போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்' என்று.

இது எனக்குப் பிடித்து இருக்கிறது என்று சொன்னேன்.

நான் கேட்டேன். "நீ ஏன் தலையில் பூவைக்க வில்லை" என்று.

"அதை வைத்துக் கொள்ளும் காலம் வரவில்லை' என்றாள்.

நான் இவ்வளவு நாள் என் மனைவியோடு பழகினேனே தவிர, அவள் ஏன் பூ அதிகம் வைத்துக் கொள்கிறாள் என்று கேட்டதே இல்லை.

அவள் சொன்னாள்'நான் மணம் ஆகாதவள்’ என்றாள்.

மணமானால் தான் பூவும் மணக்கும் என்ற, தத்துவத்தை அவள் கூறித்தான் தெரிந்து கொண்டேன்.

"கல்லூரிக்குப் போகும் போது யாராவது பூ வைத்துக் கொள்வார்களா? இது கூடத் தெரியவில்லை" என்றாள்.

அப்பொழுதுதான் இதைக் கூடத் சரியாகக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/30&oldid=1321283" இலிருந்து மீள்விக்கப்பட்டது