பக்கம்:காணிக்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

எப்பொழுதும் காதல் உண்டாவதே இல்லை. இரண்டாவது சந்திப்பில்தான் காதலே ஆரம்பபாடத்தைப் படிக்கிறது.

அதுவும் பிறர் கஷ்டப்படும்போது அந்தக் கஷ்டத்திலே பங்குகொள்ளும்பொழுதுதான் அன்பே உதயம் ஆகிறது என்பதை அறிந்துகொண்டேன்.

கண்ணகிக்கு மகன் இல்லை; எனக்கு முரளி இருந்தான். மாதவியின் மேல் கோவலன் நாட்டம் வைத்ததில் அர்த்தம் இருக்கிறது. அவன் கலாரசிகன். நான் என்னைப் பற்றி எப்படிக் கூறமுடியும். பிறர்தான் என்னைப்பற்றி விமரிசிக்க முடியும்.

முன்னமே என்னைப்பற்றிப் பலர் விமரிசித்து இருக்கிறார்கள். நான் ஒரு முதலாளி. இது எவ்வளவு பயங்கரமான சொல் என்பது எனக்குத் தெரியாது. ‘என்ன முதலாளி’ என்று மரியாதையாகச் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.

நான் குறிப்பிட்டேனே என் பெட்ரோல் பங்குக்கு முன் ஒரு தொழிற்சாலை. அவர்கள் ஒழிக. என்று சொல்லும் பொழுது என்னையே சொல்வதுபோல் இருக்கும்.

இந்த முதலாளிகளால்தான் இந்த வேலை நிறுத்தமே ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். யார் இந்த முதலாளிகளைப் படைத்தார்கள்?

அங்கே ஒரு கம்யூனிஸ்டு தோழர் பேசினார். கார்ல் மார்க்ஸ் சொன்னதாகச் சொன்னார். இயற்கை மனிதனுக்குச் சொந்தம் இல்லை; ஆகாயத்தைப் பார்த்து யாரும் இதை எனக்குச் சொந்தம் என்று சொன்னது இல்லை. நீரைப்பார்த்து யாரும் எனக்குச் சொந்தம் என்று குறிப்பிட்டது இல்லை. நெருப்பு எனக்குச் சொந்தம் என்று சொன்னது இல்லை. நிலம் மட்டும் எனக்குச் சொந்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/39&oldid=1325553" இலிருந்து மீள்விக்கப்பட்டது