பக்கம்:காணிக்கை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

என்று கூறத்தொடங்கினான். இங்கேதான் முதலாளித்தனம் உண்டாயிற்று என்று கூறினார்.

மண்ணாசை மனிதனுக்கு என்று உண்டாயிற்றோ அன்று தான் அவன் தனக்கு என்று எல்லாவற்றையும் வளைத்துக் கொள்ளத்தொடங்கிமனான். ‘மண் பெண் பொன்’ இந்த மூன்றும்தான் மனிதனை மயக்குகின்றன என்று யாரோ ஒரு சாமியார் பேசக்கேட்டு இருக்கிறேன். மயக்கினால் நல்லதுதானே. மயக்கத்திலே இருக்கிற சுகம் எதிலே இருக்கிறது.

அவள் அதுதான் மாதவி என்னை மயக்கிவிட்டாளா? சொல்ல முடியவில்லை. அது மயக்கம் இல்லை; தெளிவு: அவள் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறாள்.

ஆண் பெண் பேதம் மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்ற தத்துவத்தைப் பேசுகிறாள். இருவரும் சம உழைப்பாளிகள் ஆகப் போகிறார்கள். இதுதான் நடக்கப் போகிறது என்று கூறிமனாள்.

"எங்கள் அழகைக் கண்டு மயங்குகிறீர்கள். பின் என்ன செய்கிறீர்கள். அழகான வீடு அமைத்துச் சிறைப் படுத்துகிறீர்கள். குடும்பம் என்ற தளையில் அகப்படுத்திச் சிக்கவைக்கிறீர்கள். காதல் என்ற போதையை எழுப்பி விட்டு அதில் எங்களை மூழ்கடித்து விடுகிறீர்கள். குழந்தைகளைப் போல் எங்களுக்கு முத்தம் கொடுக்கிறீர்கள், தழுவிக் கொள்கிறீர்கள். தொட்டுத் தொட்டுப் பார்க்கிறீர்கள். நாங்கள் என்ன பொம்மைகளா? தொட்டுப் பார்க்க” என்று கேட்கிறாள்.

எனக்கு அவளைப் பற்றி ஒன்றும் புரியவில்லை. இதற்குத்தான் படித்திருக்க வேண்டும் என்பது. என் மனைவி நான் தொட்டால் சந்தோஷப்பட்டாள்; அவள் எனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/40&oldid=1325554" இலிருந்து மீள்விக்கப்பட்டது