பக்கம்:காணிக்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

காப்பியம் மணிமேகலைதான். அவள் ஒருத்திதான் இந்தக் குடும்பம் என்ற கட்டுக்குள் அடங்காமல் சமூகப் பெண்ணாக வாழ்ந்தாள். உதயகுமரனிடத்தில் உள்ளம் பாய்ந்தது." புதுவோன் பின்னால் என் நெஞ்சு போயிற்று. இதுதான காதலின் இயற்கை. இது காதலாயின் கெடுக அதன்திறம்” என்று சொல்லித் துறவுக் கோலம் பூண்டாள். எதற்காக? பசியால் வருந்தும் எளியவர்க்கு உணவு பங்கிட, சமுதாய உணர்வு அவளிடத்தில்தான் தோன்றியது என்று கூறுகிறாள்.

வேறு என்ன வேலை எங்களுக்கு இருக்கிறது? அந்தக் கண்ணகியின் சிலைக்குப் பக்கத்தில் கடற்கரை மணலில் வேறு என்ன பேச முடியும்? அங்கே உட்கார்ந்தால் கண்ணகியைப் பற்றிப் பேசுவோம்; காந்தியின் சிலையின் பக்கத்தில் நான், எதிரே இருக்கும் கல்லூரி அவளைப் போன்றவர்கள் படிக்கும் கல்லூரியாயிற்றே என்று பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் காந்தியைப் பற்றியே பேசுவாள். தொழில் சிலைக்கு வரும்பொழுதுதான் அவளுக்குக் கொஞ்சம் வேகம் வரும்.

பொதுச் சொத்தை மதிக்க வேண்டும் என்று கூறுவாள்.

"அப்படி என்றால்?"

“பஸ்களை நிறுத்தி உடைக்கக் கூடாது” என்பாள்.

"மற்றொன்று பொதுச் சொத்தைக் கொள்ளை அடிக்கக் கூடாது” என்று கூறுவாள்.

இந்த இரண்டு செயல்களை யார் செய்தாலும் அவர்களை மதிக்கக் கூடாது என்கிறாள்.

அதாவது ‘வன்முறையைத் துண்டுகிறவர்களை மன்னிக்கக் கூடாது' என்பது அவள் வாதம். மற்றென்று ஊழல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/43&oldid=1325559" இலிருந்து மீள்விக்கப்பட்டது