பக்கம்:காணிக்கை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

சரி நீங்களே சொல்லுங்கள். அந்தக் கதை முடிவு சரியா. ஒர் அழகியைச் சப்பாணிக்கு ஆசிரியர் மணம் முடித்து வைக்க விரும்பவில்லை. அவனைத் தடுக்கவே ஒரு கொலை; அவனைப் பிரித்து விட்டார். அங்கேதான் கதாசிரியர் மனம் திருந்தவில்லை. அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. டாக்டர் அவளைத் தொட இடங் கொடுத்தார். சாப்பாணி தொட முடியவில்லை. இது என்னமோ இப்படி என்னை அந்தப் படம் சிந்திக்கத் தூண்டியது.

அவள் என் முடிவை ஒப்புக் கொள்ள வில்லை. இதெல்லாம் யார் பார்க்கிறார்கள். நடிப்பு அழகாக இருக்கிறது என்றாள். கலரில் படம் அதைவிட அழகாக இருக்கிறது. அவள் பதினாறு வயது அதுதான் கதைக்கு வெற்றி என்றாள்.

‘பாபி’ படம் இப்படித்தான் என்று நினைக்கிறேன்.

அவள் பந்தயத்தில் தோற்று விடுவது அழகாக இருக்கிறது; அவளைச் சிரிக்க வைக்கிறான் கமலஹாசன். அது அழகாக இருக்கிறது.

வீட்டில் சதா மதுவைப்பற்றியே நினைப்பேன்.அவளும் நம்புகிறாள் நான் மணமாகாதவன் என்று. நான் நினைத்துப் பார்க்கிறேன். அவள் என்னைப் பளிச்சென்று கேட்டு இருக்கக் கூடாது.

ஸ்கூட்டரில் நான் தனியாகப் போவது கழுத்தில் மைனர் செயின் இது அவளுக்குப்போதும்.

அவள் பொதுவாகச் சொல்லுகிறாள். ரொம்ப பேரிடம் ஒரு கெட்ட பழக்கம் எப்பொழுதும் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுகிறார்கள்.

"உங்களுக்கு எத்தனை பசங்க?"

"ஆண் பெண்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/45&oldid=1325567" இலிருந்து மீள்விக்கப்பட்டது