பக்கம்:காணிக்கை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 நாங்கள் என்ன பேசுவோம். அவள் சொன்னுள் "நாம் முதலில் நம்மை மதித்துக் கொள்ள வேண்டும்; அப் பொழுதுதான் மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்” என்று சொல்லுவாள். இதுதான் சுயமரியாதை என்று கூறுகிருள். இந்த மாதிரி எண்ண யார் இவளுக்குக் கற்றுக் கொடுத் திருப்பார்களோ தெரியவில்லை. அவள் அப்படி எண்ணு கிருள். என்னை நான் மதித்துக்கொண்டு இருக்கிறேன். அவள் என்னை மதிக்கவில்லை. இப்பொழுது என் கய மரியாதையை விட்டு எப்படிச் சென்று அழைத்து வர முடியும். அவள் நிச்சயமாக வரமாட்டாள். மதுவை மறக்க முடியுமா என்று கேட்பாள். நான் எப்படிச் சொல்ல முடியும் மறக்க முடியும் என்று. என் வீடு வெறிச்சென்று இருந்தது. முரளி ஒரு கன் இழந்தது போல் இருந்தான். ‘அன்பு என்பது அவன் அம்மாவிடம்தான் முழுமையாகக் கண்டிருக்கிருன். நான் எப்படியும் மகிழ்விக்க முடியவில்லை. "அப்பா! யாரோ சின்னம்மா வருவார்கள் என்று அம்மா சொல்லிவிட்டுப் போனர்களே அவர்கள்' எப் பொழுது வருவார்கள்" என்று அவன் என்னவிட ஆவ லாகக் கேட்டான். எனக்கு ஆச்சரியமாக இருத்தது.அவன் அம்மாவைக் கேட்பதை விடச் சின்னம்மாவையே கேட்க ஆரம்பித் தான். . அவள் என்னிடம் முன் கொடுத்த போட்டோவை அவனிடம் காண்பித்தேன். "கலியாணமே ஆகலியா?" என்று கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/71&oldid=787115" இலிருந்து மீள்விக்கப்பட்டது