பக்கம்:காணிக்கை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 "எப்படிடா கேக்கறே" 1இல்லே தனியா போட்டோவிலே இருக்காங்களே அதுதான் கேட்டேன்?" அப்பொழுதுதான் தெரிந்தது. கலியாணம் ஆனவுடன் முதல் நிகழ்ச்சி போட்டோ. அதிலே இரண்டு பேரு சேர்த்துப் பிடிக்கிறது ஏன் என்று இப்பொழுதுதான் தெரிந்தது. என் வீட்டிலும் அவளும் நானும் சேர்ந்து பிடித்துக் கெண்ட போட்டோ சுவரில் மாட்டி இருந் தேன். அதை வைத்துக் கொண்டுதான் அவன் கேட்டான். "ஏன்பா அம்மா என்று சொல்றியே அவளுக்கு யாருப்பா அப்பா" என்று கேட்டான். "அப்பாவா?” "அதான் பா அவளுக்கு உங்களைப் போல ஒரு அப்பா இருக்க வேண்டாமா? அதுதான் கேட்டேன். 'அவளுக்கு இன்னும் கலியாணமே ஆகலியே?" 'அப் டின் ைஅவங்களுக்குச் சண்டையே போடத் தெரியாது, ரொம்பவும் சாதுவாகத்தான் இருப்பார்கள்.” "ஏன்பா அம்மா வர்லை?" என்று கேட்டான். 'எனக்கே தெரியவில்லை." "அதெல்லாம் முடியாது. அம்மா வரணும் அப்பத் தான் சாப்பிடுவேன்' என்று அடம்பிடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/72&oldid=787117" இலிருந்து மீள்விக்கப்பட்டது