பக்கம்:காணிக்கை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 இப்படி எல்லாம் பேசி இருக்கிறேன். அவளும் சிரித்துக் கொண்டே என்னைப் பார்ப்பாள். கண்ணகியும் அப்படித்தான் இருந்தாள் என்று பேசக் கேட்டு இருக்கிறேன். கண்ணகி என்ன சொன்னலும் அவள் கேட்டு ரசிப்பாளே தவிர பேச மாட்டாள். 'ஏன் வந்தாய்?' என்ற கேள்வி என் நெஞ்சு வரை வந்தது. அதற்குப் பிறகு அந்தப் பேச்சு வெளிவரவில்லை. எச்சில் முழுங்கிக் கொண்டேன். "உனக்குத் தேர்வு இல்லையா?" என்று வேறு விதமாகக் கேட்டேன். அவள் தன் கையில் 'வெறுந்தாள்' என்ற நாவல் வைத்திருந்தாள். - இது என்ன என்று கேட்டேன். 'வெறுந்தாள்” என்ருள். "வாழ்க்கை சுதாவுக்கு .ெ வறு ந் தா ளை க் த ன் காட்டிற்று' என்ற பகுதியைப் படித்தேன். வாழ்க்கை வெறுந்தாளேக் காட்டுமா என்று கேட் டேன். "வாழ்க்கை சில சமயம் வெறுந்தாளையும் காட்டும். அதில் அழகிய சித்திரம் வரைவது அறிவாளியின் கடமை' என்று அந்தப் புத்தகத்தின் முகப்பில் அவள் எழுதி வைத்திருந்தாள். அந்தக் கதையாசிரியர் எழுதாத கருத்து அவள் தன் முதல்தாளில் எழு, வைத்திருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/75&oldid=787123" இலிருந்து மீள்விக்கப்பட்டது