பக்கம்:காணிக்கை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அதற்குள் முரளி குறுக்கிட்டான். அம்மாத்ான் இல்லையே. அம்மாவா இருக்கட்டுமே அப்பா என்ருன். இந்தச் சிறுவன் எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டான். நான் பலமுறை என் மனைவிக்குக் கடிதம் எழுதியிருக் கிறேன் வந்து விடும்படி "முரளி உன் நினைவால் ஏங்கு கிருன்” என்று எழுதி இருக்கிறேன். அவள், மில் முதலாளிகள் சிலர் கதவு அடைப்பு நடத்துவது போல முரட்டுப் பிடிவாதமாகவே நடந்து வந்தாள். அவளிடம் நான் சொல்லுவது உண்மைதான். 'பத்து உன்னைத் தவிர வேறு யாரையும் என் உள்ளத்தால் நினைப்பது இல்லை” என்று சொல்லி இருந்தேன். "ஆமாம் நீ இப்படி நாவல் படித்துக்கொண்டிருந்தால் உன் படிப்பு?" 'நாவல் நான் படிப்பது இல்லை. இதன் அட்டை என் சிந்தனையைக் கிளறியது. இந்த ஆசிரியர் எழுதும் நாவல் களைவிட அவற்றின் மேல் அட்டைப் படங்கள்தான் பிடித்திருக்கின்றன” என்ருள். "பெண்களுக்கு எப்பொழுதும் 'ஜாக்கெட்'தான் பிடிக்கும் என்று சொன்னேன். அது அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்” என்றேன். இல்லை பாடிக்கும் ஜாக்கெட்டுக்கும் மாட்ச் ஆக வேண்டும் என்று சொன்னள். அதாவது புத்தகக் கருத்துக் கும் வெளிமுகப்புக்கும் பொருத்தம் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/76&oldid=787125" இலிருந்து மீள்விக்கப்பட்டது