பக்கம்:காணிக்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அவள் ஏன் புயல் நிவாரணப் பணியில் பங்கு கொள்ளவில்லை என்பது பிறகு தான் தெரிந்தது. இந்த நாட்டில் வேலை இல்லாதவர்கள் நிறைய இருக்கிருர்கள். அவர்களுக்கு அரசாங்கம் தொழில் கொடுத்து இப்பணி களில் புகுத்தலாம். மாணவர்களை இழுப்பது நல்லது அல்ல; அவர்கள் படிக்க வேண்டியவர்கள் என்று சொல்கிருள். வெள்ளங்கள் அரசாங்கம் நல்ல உறுதியான கட்டிடம் தரட்டுமே என்ற நல்ல எண்ணத்தால் தான் அடித்துச் செல்லுகின்றன. ஆக்கப்பணிகள் நிறைய இருக்க அழிவுப்பணியில் ஈடுபடுகிறர்களே இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று மழை நினைக்கிறது. உங்களுக்குத் தான் அழிக்கத் தெரியுமா, எங்களுக்கும் அழிக்கத் தெரியும் என்று இயற்கை அழித்துக்காட்டுகிறது. வீடு இழந்தவர்களுக்கு வீடு தரவேண்டும்; வாழ்வு இழந்ததர்களுக்கு வாழ்வு தர முடியும்; உற்ருர் உறவினர் இழந்து அைைதகளாக அலறியவர்களுக்கு இல்லங்களை அமைத்துத்தர வேண்டும். அவர்கள் யார்? தாய் தந்தை இழந்த தனி மனிதர்கள். அவர்களுக்கு இந்தச் சமுதாயம் தான் காப்பு அளிக்க வேண்டும். புதிய பிரச்சனைகளைச் சமுதாயம் எதிர் நோக்கி நிற்கிறது. தங்கள் தனிக் கட்சிப் பகைகளை மறந்து பணி செய்ய வேலைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வன்முறைச் செயல் களுக்கு இடம் இல்லை என்ற பாடத்தை இயற்கை கற்றுத் தருகிறது. இதை எல்லாம் அவளை நான் கேட்ட கேள்விக் குப்பதிலாகச் சொன்னாள். 'நீ ஏன் இந்தப் புயல் நிவாரணப் பணியில் ஈடு பட வில்லை ' என்று கேட்டதற்கு அவள் இவ்வளவு வேக மாகப் பதில் சொல்லி வைத்தாள். எனக்கே ஏன் கேட்டோம் என்று ஆயிற்று. அன்று ஒர் எழுத்தாளர் ஒளி பரப்பில் அழகான கருத்துச் சொன்னர். அதாவது எழுத்தாளர் வாசகர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/87&oldid=787231" இலிருந்து மீள்விக்கப்பட்டது