பக்கம்:காணிக்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 எழுதவில்லை என்று. எனக்கு எழுத்தைப்பற்றி எப்படித் தெரியும். எழுத்து என்ருல் கடையில் கணக்கு எழுதும் எழுத்து தான் தெரியும். அங்கே ஒரு ஸ்கூட்டரில் அடிக்கடி கடைக்கு வருவார். அவர் எங்கேயோ இலக்கியம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராம். அவர் மற்றவரோடு பேசிக் கொண்டிருந்தார். "சார் இந்த எழுத்தாளி பேச்சை நீங்கள் கேட்டீர் களா?' என்றேன். என் ன செய்வது பேட்டி கேட்டால் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது சொல்லி வைக்க நேரிடுகிறது. யாருக்காக எழுதுகிருர் என்று கேட்டால் 'எனக்காக எழுதுகிறேன்' என்று பதில் சொன்னராம். "அவர் எப்படி சார் அப்படிச் சொல்லலாம். விமரிசகர் களுக்கும் வாசகர்களுக்கும் தானே எழுத வேண்டும்" என் ருர். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. மதுவைக் கேட்டேன். நீ என்ன நினைக்கிருய். யாருக்காக நீ வாழ்கிருய் என்று கேட்டேன். 'எனக்காக வாழ்கிறேன்' என்ருள். அப்புறம் தான் தெரிந்தது அந்த எழுத்தாளர் சொன்னது உண்மை என்று. "அவரவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றி ஒரு கொள்கை இருக்கிறது. அதை வாழ்ந்து காட்டுவதில்தான் அந்த வாழ்வு முழுமை அடைகிறது" என்று கூறினள். - "அப்படியானல் எழுத்தாளன் தனக்காகத் தான் எழுதுகிருன?" மறுபடியும் வற்புறுத்திக் கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/88&oldid=787235" இலிருந்து மீள்விக்கப்பட்டது