பக்கம்:காணிக்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 "ஆம் அவன் என்ன நினைக்கிருனே) அதை எழுது கிருன். அது தான் எழுத்து என்ருள்." "அது பிறருக்குப் பயன் பட வேண்டாமா?" "எழுத்தாளனைப் புரிந்து கொள்கிறர்கள். அது ஒரு அனுபவம்” அவ்வளவு தான். படிக்காத எனக்கும் எழுத்து, கலை, அரசியல் முதலிய வற்றை அவ்வப் பொழுது சொல்லி வந்தாள். பெண்கள் என்ருலே வெட்டிப் பேச்சுப் பேசுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அவளைப் பொறுத்த வரை அது உண்மையாக இல்லை. தொழில் பற்றிய பேச்சு வியாபாரிகளுக்குப் பிடிக்கும். உறவுகள் முறிவுகள் இப்பேச்சுப் பெண்களுக்குப் பிடிக்கும். கிளர்ச்சிகள், படங்கள் இளைய சமுதாயத்துக்குப் பிடிக்கும். அடிதடி அரசியல் பிரச்சனைகளாக ஆக்குவது வன்முறையாளர்க்குப் பிடிக்கும். ஒழுங்கான ஆட்சி மக் கள் தலைவர்களுக்குப் பிடிக்கும் என்று அடுக்கிப் பேசிள்ை. அவள் யாரையோ மனதில் வைத்துக் கொண்டு இப்படிப் பேசிள்ை. நாட்டில் ஒழுங்கான ஆட்சி நடை பெறுகிறது என்பது அவள் அபிப்பிராயம். "அது தான் அதிக மழை பொழிந்து விட்ட து'.என்று: நான் சிரித்துக் கொண்டே பேசினேன். அது சரி பழங்காலத்திலே கூட இப்படித்தான் பைத் தியக்காரத் தனமாகப் பேசினர்கள். வேதம் ஒதும் அந்தணர்க்கு ஒர் மழை நீதி நடத்தும் மன்னனுக்கு ஒர் மழை கணவனை மதித்துக் கற்புடன் வாழ்பவர்க்கு ஒர் மழை என்று மழை பெய்ததாகச் சொல்கிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/89&oldid=787238" இலிருந்து மீள்விக்கப்பட்டது