பக்கம்:காணிக்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 இப்பொழுது யாருக்கு இம்மழை என்று கேட்டேன். 'இதே தமிழகத்தில் மழையே பெய்யாமல் வானம் வெறித்துக் கிடந்தது. இப்பொழுது மழை பெய்து கருத்துக் கிடக்கிறது. இயற்கை எதையும் அதிகமாகத் தந்து விடுகிறது. அதைத் தாங்கும் சக்தி மனிதர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது' என்று ஒரு புதிய தத்து வத்தைச் சொன்னாள். அவள் சொல்லுவதை என்னுல் முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாது; முடியவில்லை. அவள் சொல்லுவது: கம்யூனிஸ்டு அரசாங்கம்; அப்படித் தான் நினைக்கிறேன். அங்கே யாரும் வள்ளல்கள் என்று சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. பிச்சை எடுப்பதும் குற்றம். அவர்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்குவது. குற்றம். எனக்கு ஒரு அனுபவம் நினைவுக்கு வருகிறது. தாசப்பிரகாசு பஸ் ஸ்டாண்டு என்று தான் நினைக்கிறேன். அவளைச் சந்தித்து விட்டு எத்தனையோ பஸ்களைப் பிடித்து. விட்டு அங்கு வந்து சேர்ந்தேன். முன் அவளோடு சந்தித்துப் பேசிய நீலக்கல் உணவு விடுதியும் அதன் எதிரே தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். அவள் எனக்குப் பணம் கொடுத்த சம்பவம் அதை எப்படி மறக்க முடியும். அதற்கு எதிர் பஸ் நிலையம் தான். அவன் முரட்டுத் தனமாக இருந்தான்; உழைப்பினல் அந்த முரட்டுத்தனம் ஏற்படவில்லை. மற்றவர்களிடம் சுருட்டுவதால் தான் அந்த முரட்டுத்தனம் ஏற்பட்டு இருக்கும் என நினைக் கிறேன். அரைமனிதன்' நாவலில் வரும் ரவுடி ரங்கனை இங்கே பார்க்க முடிந்தது. அப்படியே தான் இருந்தான். அந்த ஆசிரியர் ஒரு வேளை அவனை இங்கே தான் பார்த், தாரோ தெரியவில்லை. - அந்த அறுப்புக்காரக் கந்தன் கூட உண்மையான பாத்திரம் என்று பேசிக் கொண்டார்கள். கார் சர்வீசு'க்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/90&oldid=787241" இலிருந்து மீள்விக்கப்பட்டது