பக்கம்:காணிக்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வந்த பழைய ஆள் ஒருவர் பேசிக் கொண்டிருந்தார், "இந்த அறுப்புக்காரக் கந்தன் வேறு யாரும் இல்லை. சார் துளையிலே ஒரு ரவுடி இருந்தான். அந்த ஆசிரியர் அந்தப் பாத்திரத்தைப் படைத்திருக்க வேண்டும். அவன் பேரு கூட கந்தன் தான். ஒவ்வொரு வெற்றிலைப் பாக்குக் கடை யையும் மிரட்டிக் கொண்டு வந்தான்.கடைசியில் சூளையில் ஒரு தட்டான் கடையில் அவனை அடித்து நொறுக்கி விட்டார்கள். அவர்கள் எவ்வளவு தூரம் பொறுத்துப் பார்க்க முடியும். போய் செலவுக்குப் பணம் கேட்டு இருக்கிருன். அவர்கள் கொடுக்க முடியாது என்றுதுணிந்து சொல்லி விட்டார்கள். இவன் வழக்கம் போல் ஜே.பியி லிருந்து பிளேடு எடுத்து மிரட்டினன். அவ்வளவுதான் வந்தது கோபம். ஊது குழலிலேயே அடித்து நீட்டி விட் டார்கள்.அறுப்புக்காரக் கந்தன் கொலைக் கேசு அதை வண்ணுரப் பேட்டை மாணிக்கம் என்ற டேப்புப் பாடகன் ஒரு புத்தகம் போட்டு விற்றன். அந்தக் காலத்திலே ஒரு "கொலை' என்ருல் அது உடனே விலை என்று பாட்டுப் புத்தகம் போட்டு விற்ருர்கள். 'தினத் தந்தி வந்ததும் அது எல்லாம் படுத்துக் கொண்ட து என்று ஒரு வரலாறே சொல்ல ஆரம்பித்தான். பத்திரிகையின் தரம் எவ்வளவு உயர்ந்து விட்டது. என்பதைத் தெரிந்து கொண்டேன். அது தான் அந்த ரவுடி ரங்கனைப் போலவே அந்த ஆள் இருந்தான். புது மல் ஜிப்பா ஆள் நன்ருக இருந்தான். உழைக்கலாம். ஏன் 'உழைக்க வேண்டும். பிழைக்கத் தெரிந்தவன். கையில் குழந்தையை வைத்துக் கொண்டு காசு கேட்டான். அநேகமாக அங்கிருந்த அனைவரும் காசு போட்டார்கள் நானும் போட்டுத் தொலைத்தேன். அந்தக் குழந்தைக் காக அல்ல; அவன் முரட்டுப் பார்வைக்கு அஞ்சி. பலபேர் குழந்தைகளைப் படுக்க வைத்து விட்டு அவர்களைக் காட்டிப் பிச்சை எடுக்கிருர்கள். நான் நினைக்கிறேன் அவர்கள் தம் குழந்தைகளாக இருக்க முடியாது.அதற்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/91&oldid=787243" இலிருந்து மீள்விக்கப்பட்டது