பக்கம்:காணிக்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91 வாடகைக்கு வாங்கி வந்து விடுவார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. தம் சொந்தக் குழந்தைகளாக இருந்தால் இப்படி வாட்டுவார்களா? என்ன செய்வது இரக்க உணர்வை எழுப்பிப் பிழைக் கும் வழக்கம் இந்த நாட்டில் உண்டாகி விட்டது. அது கூடாது என்கிருள் மது. இப்பொழுது கூடபலபேர் உண்டி குலுக்கி வருகிறர்கள். பத்துக்காசு கூட ஒருசிலர் போடு கிருர்கள். சே! இந்த நாட்டுப் பிச்சைக்காரர்கள் அப்படி மனிதர்களைப் பழக்கி விட்டு இருக்கிருர்கள் என்று நினைக் கிறேன். நிறைய நிதி வழங்குகிருள்கள். மக்கள் நல்ல உள்ளத் தை வாழ்த்த வேண்டி இருக்கிறது. அவள் பேசவில்லை. மற்ற பெண்கள் அவளோடு படித்தவர்கள். திருச்சிக்குச் சென்று சேவை செய்து விட்டு வந்தார் கள், அவள் பேச்சே இல்லை. அவள் தன் கொள்கையில் உறுதியாக இருக்கிருள். இப்படித் தனியார் உதவி செய் வதால் அரசாங்கம் முழுப் பொறுப்போடு செயல்பட முடிவதில் ைநிதி தரலாம்; ஆனால் இந்த மாணவர்கள் தம் படிப்பைக் கெடுத்துக் கொள்வது நல்லது அல்ல என் கிருள். 'படிப்பு அவ்வளவு முக்கியமா?" என்று கேட்டேன். 'படிப்பு முக்கியம் இல்லை. தேர்வு முக்கியம்' என்று சொல்கிருள். தேர்வில்தான் இந்த மாணவர்களின் எதிர்காலம் உருவாகிறது என்ருள். அதுதானே முக்கியம் என்று சொல்கிருள். சரி குறை வேறு எங்கோ இருக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். அவள் இந்தச் சமூக சேவையைப்பற்றி ஒர் அனுபவத் தைக் கூறிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/92&oldid=787245" இலிருந்து மீள்விக்கப்பட்டது