பக்கம்:காணிக்கை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95. சமுதாயத்தைப் பாதிக்கிறது. தனிமனிதனை முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாக்குவது தான் குடும்பம்' என்ருள். அவள் எப்படி இந்த ஞானத்தைப் பெற்ருள் என்பது எனக்கு வியப்பாக இருந்தது. "இங்கே வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். அதற்குமுன் சமுதாயம் என்பது ஒன்று உண்டு அதற் காகத்தான் வாழவேண்டும் என்று நினைத்தேன். இங்கே வந்த பிறகுதான் இதன் பெருமையை உணர்ந்தேன். அவள் கோபித்துக்கொண்டு போனது நியாயமாகத்தான் படுகிறது. பெண் அந்த ஒன்றை மட்டும் தாங்கமாட்டாள். தன் கணவன் புற உலகுக்குச் செய்யும் தொண்டினைப் பணியினை ஏற்றுக் கொள்வாள்: இந்த வகையில் அவன் மனத்தில் ஒருத்தி இடம் பெற்ருல் அதைத் தாங்க மாட் டாள். அதற்குத்தான் 'காதல்' என்று பெயர் என்று கூறினுள். அன்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். என் மனேவிக்கும் எனக்கும் உள்ளது காதலா உறவா என்று சிந்தித்தேன். காதல் பற்றி ஏற்பட்ட உறவுதான் என்பதைத் தெரிந்து கொண்டேன். மதுவிடத்தில் நான் காதல் கொள்வது தவறுதான். அதை அவள் எப்படி ஏற்றுக் கொள்வாள்! எனக்குத் திடீர் என்று ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. அது முரளியைப் பற்றி. எனக்கு வரவில்லை. வேலைக்காரிக்கு எழுதி இருந்தாள். முரளி எப்படி இருக்கிருன் என்று கேட்டு இருந்தாள். அவன் அடம் பிடிப்பானே பள்ளிக்கூடம் ப்ோகமாட்டேன் என்று; என்ன செய்கிருன் என்று கேட்டு எழுதி இருந்தாள். அந்தக் கடிதத்தை வேலைக்காரி என்னிடம் கொடுத் தாள். நான் அவசரப்பட்டு எழுதச் சொன்னேன். 'நீ சொன்ன சின்னம்மா வந்து கவனித்துக் கொள்கிருள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/96&oldid=787254" இலிருந்து மீள்விக்கப்பட்டது