பக்கம்:காணிக்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 எழுது" என்று சொல்லிவிட்டேன். நானே அவளுக்கு 'உள்நாட்டுக் கடிதம் ஒன்று வாங்கித் தந்தேன். அதில் அவள் அவ்வாறே எழுதி அனுப்பினுள். அவள் வேலைக்காரிதானே சொன்னபடி செய்தாள். "சின்னம்மாதான் வந்து அடிக்கடி கவனித்துக் கொள் கிருள். அவள் தவருமல் ஒவ்வொரு மாலையும் வந்து கவனிக்கிருள். பிறகு ஹாஸ்டலுக்குப் போய் விடுகிருள். அவள் ரொம்பவும் அழகாக இருக்கிருள்” என்று வேண்டாத விஷயத்தையும் எழுதி விட்டாள். அந்தக்கடிதம் அந்த மூன்று நாளில் எழுதியது. இலக்கியம் எப்படிச் சாகா நிலை பெறுகிறதோ அதேபோல் அந்தக் கடிதம் சாகாவரம் பெற்றுவிட்டது. மதுவைப் பற்றிய எண்ணம் அவள் நெஞ்சில் நிலைத்த இடத்தைப் பெற்றுவிட்டது. வேலைக்காரி நான்கு வரக்கியமாக முடித்து வைத்தாள். அதற்குப் பிறகு அவள் என்ன எழுதினுள் அது எப்படி எனக்குத் தெரியும். அப்புறம் எழுதுவதற்கு என்ன இருக்கிறது. மதுதான் வருவது இல்லையே! அவள் சிநேகிதி இல்லாததும் பொல்லாததும் பேசி இருக்கிருள். 'நீ எப்படி இரவு தங்கலாம்? என்று கேட்டிருக்கிருள். "இரவு அதல்ைதான் தங்கினேன்' என்ருள். "அது தவறு ஆயிற்றே" "விடுமுறை; மூன்று நாட்கள்: வார்டன் ஒன்றும் சொல்ல முடியாது". - - "வார்டனுக்காகத்தான் நாம் தவறு செய்யாமல் இருக்கிருேமா'. 'அப்படித்தான் அவர்கள் நினைக்கிருர்கள்." " அது இல்லை பெண்கள் இல்லாத வீட்டில் நீ எப்படித் தங்கலாம்" - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/97&oldid=787256" இலிருந்து மீள்விக்கப்பட்டது