பக்கம்:காணிக்கை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இவ்வளவு பெரிய இங்கிலீசு எனக்கு எப்படித் தெரியும். - 'இது புது வகைக் காதல். உங்கள் உடம்பு எனக்குத் தேலை இல்லை. ஆனல் உங்கள் காதல் எனக்குத் தேவை. உங்களை நேசிக்கிறேன். ஆனல் இச்சிக்கவில்லை' என்ருள். இது அரை மனிதன் நாவலில் நொண்டி பேசுவதைப் போல இருந்தது. அவளிடம் உறவு கொள்ள விரும்பி னேன். ஆனல் அவளை விரும்பவில்லை. இதைப் போலத் தான் அவளும் பேசிள்ை. "இந்தக் காதல் கவிதையைப போன்றது. கவிதையைச் சிலர்தான் ரசிக்க முடியும். அதைப் போன்ற நிலை இது" என்று கூறினுள். "அப்படி என்ருல்" "உங்களிடம் என் உள்ளத்தைப் பறி கொடுத்து விட்டேன். உங்களிடம் பேச வேண்டும் பழக வேண்டும் ஆனல் நீங்கள் எனக்குத் தேவை இல்லை' என்ருள். இது ஒரு புதுவகை அனுபவமாக இருந்தது. அதற்கு எனக்கு என்ன அருகதை இருக்கிறது என்று எண்ணிப் பார்த்தேன். முடிவு தெரியவில்லை. நான் படிக்கவில்லை, அதாவது கல்லூரியை எட்டிப் பிடிக்கவில்லை. காதல் என்பது அங்குப் படிக்கிறவர் களுக்குத்தான் தெரியும் என்று பேசிக் கொள்கிருர்கள். எனக்கு இந்த மாணவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவே முடிவதில்லை. மண்ணிக்கணக்காக் நடைபாதையில் நின்று பேசுவார் கள். என்ன பேசுவார்கள்? மதுவைப் போலப் பொது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காணிக்கை.pdf/99&oldid=787261" இலிருந்து மீள்விக்கப்பட்டது