பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஒரு நெட்டு கருப்புக் கூடாரம் அதிலே

ஒரு நெட்டு செங்காவிக் கூடார மடித்து ஐந்து நாழிகை விஸ்தாரம் சாயபு

ஆள் கற்றிப் பாராவுஞ் சீக்கிரமாய் வைத்து *ரோந்துகளுஞ் சுற்றிவரச் சொல்லி சாயபு நூறு பேர் சோல்ஜர்கள் கையில் கத்தி கொடுத்து பாராவுஞ் சீக்கிரமாய் வைத்து - தனது

பாளையத்தை சாக்கிரதையாய் வைத்திருக் கையிலே

கான்சாகிபுவின் பட்டாளத்தைத் தாக்குதல்

மதுரை வளர் கான்சாயபு நீலன் இந்த

வகையாக மம்முதலி வந்தவகை கேட்டு தாதப்ப னரசப்ப னாய்க்கன் தனக்குச்

சரியான சேகுகான் பாவையு மழைத்து முரசு வெள்ளைக் காரனையுமழைத்து கானு

முன்னிறுத்தி துரைமார்க்கு ஏது சொல்லலுற்றான் தேனுரில் மம்முதலி வந்தான் நானும் சீக்கிரத்தில் ராத்திரிக்கு பேட்டி பண்ணி வாரேன் நான்போய் திரும்பி வருமட்டும் பிரிட்டன்

ராசாதிபதி துரைக்குப் பத்திரங் கோட்டை என்று சொல்லி துரைகானு சாயபு குதிரை

எழுநூறு வரைக்குமே சீனி வைக்கச் சொல்லி பனிரெண்டு மணிவேளைக் கெல்லாம் கானு

பார்த்திட்டான் குதிரைகளை வடக்குமுகம் நோக்கி ராத்திரியே குதிரையை நடத்தி கானு

ரண்டாம்பே ரறியாமல் பாளையத்தை யடித்து ஒளிவாக யிருந்திட்டா னப்போ விடிய

ஒண்ணரை நாழிகைக்கு முன்னதாய் துரைகள் அன்பான கர்னல் துரையும் அதிலே

அக்கினி மயமான முசியார் பரங்கி துரையும் சின்ன பிரிட்டனுஞ் சேர்ந்து அப்போ துரைமார்கள் சிப்பாய் மார்களை வரிசையாய் நிறுத்தி அடிச்சிட்டார் குச்சித் தம்பூரு எங்கும்

அதிருதே மைதான வெளியெல்லா மப்போ இதுகேட்டு மதுரை துரைகானு சனத்தை

எழுப்பியே குதிரையின் மேல் சிக்கிரமா யேறி

நேட்டு வரிசை ரோந்து - round என்பதன் திரிபு