பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99

முதல் பாராக் காரனையும் வெட்டி 争@ சமூச்சுக்குள்ளே பாய்ந்து பாளையத்தில் விழுந்து இன்னம் வேறு நினைப்பு நினையாமல் கானு

எழுநூறு குதிரையிலே பாய்ந்திட்டா னப்போ நீர்த்துளி யாடிவரும் போது பாளையம்

நெளிப்பதை மம்முதலி கண்ணாலே கண்டு கால் பதறி மோசம் வந்ததென்று அப்போ

கனமான மம்முதலி மூர்ச்சையாய் விழுந்தார் கண்டார்கள் துரைமார்க ளப்போ

கனகமுடி மன்னனைப் பல்லக்கில் வைத்து

தும்பூரு கோட்டையி னுள்ளே பாதர்

துரைமகன் நவாபு தன்னைத் தோத்த மாத்திரத்தில் கலந்திட்டான் சாயபு வென்று மன்னன் கனம் பெற்ற துரைமார்க ளணியணியாய் நின்று முசியார் பரங்கி வெள்ளைக் காரன் களத்தை

முன்னெற்றி தொப்பி கழற்றிக் கீழே யடித்து முன் கையை சீக்கிரங் கடித்து அப்போ

மூன்றணியாய் சனம் வகுத்து முட்டினான் சண்டை எள்ளு பொரி கொள்ளு பொரி போலே அங்கே

ஏறுதே பொல்லாத ரேக்லா குண்டு துப்பாக்கி சத்தத்தை யங்கே பார்த்து

சொல்லவே போகாது மைதான வெளியில் அத்தனை குண்டிலே காணன் பயந்து

அஞ்சாதே வெட்டினான் பொல்லாத கானன் வெள்ளரிக்காய் யோலே காணன் அப்போ

வீசிவீசி யெறிந்திட்டான் சொல்ல முடியாது கத்தி யெல்லாம் ரத்தமா யொழுக வெட்டி

கலைத்திட்டான் பாளையத்தை நிர்த்துளியாக ஐந்து கும்பினி சிப்பாய் மாணி - கானு

அறுத்துமே குதிரைகளை நறுக்கி - துண்டு துண்டாக குதிரைகளை நறுக்கி அப்போ

துரைமகன் திருப்பினான் திசைமதுரை நோக்கி தும்பூரி லிருந்து நவாபு திரும்பிச்

சுருக்கமாகப் பாளையத்தை சீக்கிரம் பார்த்து அதிவீரன் கான்சாயபு கையால் அங்கே

ஐந்து கும்பினி சனம் விழுந்ததைப் பார்த்து ஆண்பிள்ளை கெட்டியென்று சொல்லி நல்ல

அதிவீரன் துரைமார்க்கு தைரியஞ் சொல்லி

  • மூச்சுக்குள்ளே - மூச்சுவிடுமுன் - வினாடிக்குள்