பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

துருக்கில் போடுதல்

அப்போது கான்சாய்பைப் பிடித்து நல்ல

அழகான ரயில் வண்டி மேலேற்றி வைத்து ஒற்றைத் தப்பட்டத்தை யடித்து வண்டியை

ஒளிவாகப் பாளையத்தை சுற்றியே யிழுத்து பட்டமா மருகில் கொண்டு வந்து அப்போ படை வீரர்கள் கானனுக்குக் கழுத்தில் சுருக்கிட்டு ஏற்றினார் மாமரந் தனிலே கானு

இளப்புட னாயாச மொன்று மில்லாமல் - கிறுகிறென்று மூன்று தரஞ் சுற்றி - அப்போ

கீழே விழுந்தானே கான்சாயபு துரையும் மறுதரமுஞ் சுருக்கிட்டுத் தூக்க கானு

மன்னவனும் ரண்டு விசை கீழே விழுந்தான் மூன்று தரங் கட்டித் தூக்க அப்போ

முனை வீரன் கான்சாயபு விழுந்திட்டான் கீழே அப்போது கான்சாயபு துரையும் பாதர்

ஆண்பிள்ளை சிப்பாயி முகம் யேறிட்டுப் பார்த்து என்னை யேண்டா வதைக்கிறீர் நீங்கள் என்று

இயல்பாக கானனுஞ் சிப்பாய்களைப் பார்த்து மலையாளத்துப் பொம்பக்காள் கொடுத்த நல்ல

வச்சிரமணி நரிக்கொம்பு சிமிழினி லடைத்து உச்சிப் பிடரிதனி லிருக்குதடா" அதை

உபாயமா யெடுத்தெறிந்து துக்குங்க ளென்றான் அப்போது சூரியினால் குத்தி சிமிழை அறுத்தெடுத்து கான்சாயபை தூக்கிலே போட்டார் ஏழு பேரை சுற்றிலும் வைத்து பாதர்

ஈஸ்வர நவாபுதுரை யிருக்கும் வேளையிலே பிடித்துக் கொடுத்தானே பார்ப்பான் அவனைப்

பின்கட்டாய் கட்டியே கொண்டுவரச் சொல்லி சீனிச்சிறாவே யொரு சேதி இப்போ

சிங்கம் நவாபுதுரை சொல்லுகிறேன் கேளு அன்ன மிட்டோனைப் பிடித்துக் கொடுக்க உனக்கு

ஐந்து பஞ்ச பூதமுந் துணிந்ததோ பாவி

100. வீரர்கள். ராட்சசர்களின் உயிருக்கு ஆதாரமான தொன்று. ஒரு மறைவிடத்தில் இருப்பதாகக் கூறுவது நாட்டுக் கதை மரபு. அவர்கள் உடலுக்கு வெளியிலும் அது

இருக்கலாம். இங்கு அவன் உச்சித் தலையில் இருந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.