பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

முகரேடே பேச முடியாது என்று

முகந்திருப்பி மாசாவும் வெளியிலே வந்து

அகமான கிரிதனிலே நின்று மனதி

லன்பாக மாஷாவும் யோசனைகள் செய்து

துரோகியின் நன்மை யெல்லா மறிந்தோம் மதுரை

தேவி நன்மை யினியறிய வேணுமென்று

மீனாட்சிக்குச் சிறப்புச் செய்தல்

வராகி செகசோதி கெளமாரி மதுரை

மகமாயி சன்னதிக்கு வந்தனைகள் செய்து எண்ணுறு பொன்னெடுத்துக் கொடுத்து மதுரை ஈஸ்வரி மீனாட்சிக்குச் சிறப்பு செய்யச் சொல்லி முந்நூறு குடந்தண்ணீர் கொண்டு வந்து

முழுகியே மாசாவும் பட்டுடை யுடுத்தி மந்தாரை முல்லை யிருவாட்சி நல்ல

மகிழம்பூ செவ்வலரி மாலைக ளணிந்து நந்தா குடமல்லி தரித்து நல்ல

நளினி மிகுபுனுகு சவ்வாதுகள் தானணிந்து சதுராகக் கோபுரங் கடந்து மீனாள்

சந்நிதியில் மங்கையர்கள் தான்சூழ வந்து

மாஷாவின் பிரார்த்தனை

திருமலைக் கர்த்தாக்கள் நாட்டில் ஆயி

தேவியாய் வந்தவளே பாண்டியன் மகளே சாதியிலே புலைச்சிநான் தாயே உந்தன்

சந்நிதிக் கெதிராக வருகிறே னடியாள் மாடு தின்னும் புலைச்சி நான் வாரேன் என்று மனதிலே யெள்ளளவுங் கவலை வைக்க வேண்டாம் கொஞ்மாய் மனதிலே நிலைந்து ஆயி

கோபித்துக் கொள்ளாதே பாண்டியன் மகளே வஞ்சக மனதில் நினையாதே பெற்ற

மாதாவு நீயுந்தான் மதலை நானடியாள் துரைகானு பங்கிலே நீயிருந்தால் எனக்கு

துடியாக வலதுபுறஞ் சொல்ல வேனுந்தாயே இரவிகுல" மறவர் பங்கி லிருந்தால் எனக்கு

இடதுபுறஞ் சொல்லென்று கேட்டாளே மாசா

49. மறவர்குலம் ஆரியகுலம் என்று மாஷா சொல்கிறாள்.