பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


இடிபோலப் பேரிகை முழங்க நல்ல
        இசையான சங்கீத மேளந் துலங்க
திடமுடைய நகுலா பராக்கு [1] உலகில்
        தேவ தேவேந்திரா தீரா பராக்கு
வடக்கரைப்புலி பெரிய வுடையார் தேவர்
        வங்கிஷம்[2] விளங்க வருமாலே பராக்கு
இப்படி கட்டியங் கூற பூலோக
        வந்திர னாதிபதி கொலுவந்து சேர்ந்து
கெற்புலி முத்து வடுகையா பாதர்
        கிரீஷகொலு சேர்ந்தவுடன், தாண்டவ ராயன்
திருப்பாகரை தனக்கு வந்து வெள்ளி
        செம்புதனில் சுத்த ஜலமதை மொண்டு கொண்டு
திருப்பாகரை யிதை கடந்து துரை
        தேவேந்திரன் கொலுவில் சென்று தளகர்த்தன்
ஒருபிடி வராக னொருதட்டில் கொட்டில்
        உத்தமன் தளகர்த்த னிருகையி லேந்தி
துருவ னெதிரில் திஷ்டி[3] சுத்தி அதைச்
        சுழற்றியெறிந்து முல்லை தாண்டவராயன்
வேதமொரு முரையோர்கள் துரையை
        வேளாளான் மூன்றுதரஞ் சுற்றிவந்து நின்று
பாதமதில் பன்னீர் சொரிந்து பின்
        பட்டிழை யிரமது தானே துடைத்து
தங்கமலர் வெள்ளி மலரெடுத்து வரை
        சாமியுட பாதத்தில் தானுஞ் சொரிந்து
செங்கை குவித்தே முல்லை மார்பன் நல்ல

        செகமண்ட லேஸ்வரன் திருவடி தனியே

முத்துவடுகன் தளவாய் உரையாடல்

திடீரென்று யிருகையால் தாங்கி துரை
        சீர்பெற வாசீர்வதித் தெழுந்தி ரென்று சொல்லி
மோதிரக் கையினாலே தாங்கி அண்ணே
        முடிமன்னா காராளா சொல்லுகிறேன் கேளு
வயதுக்கு மூத்தவன் நீயண்ணே என்னை

        வணக்கமாய்க் கும்பிடுதல் ஞாயமல்ல சொன்னேன்

  1. பராக்கு இது எச்சரிக்கைக்காரர் கூறுவது.
  2. வங்கிஷம், வங்கிசம் (பா.வ.) அரசர் முன்னிலையில் கட்டியக்காரர் கட்டியம் கூறுவது.
  3. திஷ்டி - கண்ணுறு. திருஷ்டி, வராமலிருக்க