பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழ் - என் மகன் I பிள்ளைக் கலிதனத் தீர்க்கவந்தாய்-அன்புப் பெட்டக மேஇன்பம் சேர்க்க வந்தாய் உள்ளக் கவலைகள் ஒட்டவந்தாய்-என்றன் ஓவிய மேபுகழ்க் காவியமே கொஞ்சுங் கனியிதழ் திேறந்தால்-உள்ளம் கொள்ளைகொள் ளுங்களி கூடுதடா விஞ்சு கலந்தரு யாழுடனே-குழல் வேண்டுகி லேன் தமிழ் மாமகனே பைந்தளிர் மேனியைத் தீண்டுகையில்-தமிழ்ப் பாலக னேகடை காணுகையில் பைந்தமிழேஎன நின்பெயரைச்-சொல்லிப் பாடிப் புகழ்ந்துனைப் பேசுகையில் 43