பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காவியமும் ஒவியமும் ஆனலும் அவனுக்குத் தேர் வேகமாகப் போய்க் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டுமென்ற விருப்பம் மட்டுக்கு மிஞ்சி இருக்கிறது. அந்த விருப்பத்தைத் தன் தோழனுக்குச் சொல்வது போலே சொல்கிருன் : அப்பா, கொஞ்சம் தேர் வேகமாகப் போகட்டும்.' எதற்காக அவ்வளவு வேகம் : பாகன் வெறும் வேலைக்காரகை இருந்தால், "வேகமாக ஒட்டு' என்று கட்டளையிட்டு விட்டுப் பேசாமல் இருந்துவிடலாம். நாம் வ்ண்டிக்காரனே முடுக்க, அந்த முடுக்குதலுக்குப் பயந்து வண்டிக்காரன் குதிரைகளே முடுக்க அவை அவன் சவுக்குக்கும் தாற்றுக்கோலுக்கும் அஞ்சி உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடுவது நம்முடைய வண்டிச் சவாரியின் லக்ஷணம். - பாகனுக்குத் தேர் வேகமாகப் போகவேண்டிய அவசியத்தை வெளிப் படுத்துவதைத் தன் கடமை யாக நினைக்கிருன் தலைவன். அதைச் சொன்னல் தான் தலைவனுடைய மனேவேகம் பாகனுக்குப் புலப்படும். சொல்ல ஆரம்பிக்கிருன். தேன் நவின்ற கானம் : இதோ பார்! இந்தக்காடு முழுவதும் இப்போது எப்படி ஆகிவிட்டது ! நாம் முன்னலே வந்தபோது வெறிச்சென்று இருந்த மரங்களெல்லாம் கார்காலம் வந்தவுடன் பருவமடைந்த கன்னிகை போலத் தளிர்த்துத் தழைத்து மலர்ந்து நிற்கின்றன. வண்டு கள் மலர்களில் மொய்த்துத் தேன் உண்டு மகிழ் கின்றன. கண்ணுக்கு கிறைந்த காட்சியும் காதுக்கு இனிய ரீங்காரமும் உள்ளதாக விளங்குகின்றது இந்தக் கானம. கானத்து எழில்: அந்தக் கானகத்துக்கு முழு அழகையும் தந்திருக் கிறது கார்காலம். இந்த எழிலே நான் பார்க்கிறேன்; யுேம் பார்க்கிருய், கான் சென்ற காரியம் நிறை