பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കൂഖ് & 65 'குதிரைவண்டிக்காரகை இல்லாம்ல், நூல் நவின்ற பாகனக விளங்குகிருன். - * இந்த நூல்கள் கிடக்கட்டும்; மனிதர்களின் மன இயல்பையும் அவன் நன்கு தேர்ந்திருக்கிருன். தசரத ருடைய தேர்ப்பாகனகிய சுமந்திரன் சிறந்த மந்திரி யென்பது புராணப் பிரசித்தம். தேர்ப்பாகன் மந்திரி யாக இருந்தானென்று சொல்வதைவிட ஒரு மந்திரியே அரசனுக்குச் சாரத்தியம் செய்தானென்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இங்கே, தலைவன் நெடுந்துாரம் பிரயாணம் செய்யும்போது அவனுடைய உள்ளம் உவக்கும்படியாகக் கதைகளே யும் யோசனைகளேயும் சொல்லி ஊக்கம் ஊட்டும் திறமை இந்தத் தேர்ப்பாகனிடம் இருக்கிறது. தலைவ னுடைய உணர்ச்சியும் வேகமும் எங்த அளவில் இருக்கின்றனவோ அந்த அளன்வை அறிந்து தேரைச் செலுத்துவதில் பாகன் வல்லவன். அவனே நூல் கவின்ற பாகன் என்று, சொந்த அநுபவத்தால் உணர்ந்துகொண்ட தலைவன் சொல்வது எப்படி முகஸ்துதியாகும் அவனைப் பார்த்துத் தலைவன் என்ன சொல் கிருன் ? - தேர் நொவ்விதாச் சென்றீக ! “நின் தேர் வேகமாகப் போகட்டும் என்று சொல்கிருன். சொல்கிற மாதிரிதான் எவ்வளவு கெளரவமாக இருக்கிறது? வேகமாக ஒட்டு என்று கட்டளையிடவில்லே. குதிரைகளே முடுக்கு என்று சொல்லி யிருக்கலாம். அவை உயிருள்ள ஜீவன்களல் லவா ? அவற்றை அளவுக்குமேல் முடுக்குவது தவறு. அன்றியும் அந்தக் குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாப்பவன் பாகன். அவற்றைப் பதமறிந்து ஒட்டும் உரிமை அவனுக்குத்தான் உரியது. அதை விரட்டும்படி சொல்லும் உரிமை தலைவனுக்கு இல்லை ; இல்லையென்று தலைவன் கினைத்தான். காவி. 9