பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காவியமும் ஒவியமும் மேலே இன்ப வாழ்வு பெருகுவதற்குரிய பொரு ளும் அவ்வாழ்வு மிக்க இன்பமுடையதாகும் வாய்ப்பும் அந்தப் பிரிவினல் உண்டாகும். தலைவன் அவ்வாறு பிரியுங்கால் அப்பிரிவைப் பொறுத்துத் துன்பத்தை யெல்லாம் அடக்கி ஆற்றியிருத்தல்தான் உண்மையான கற்பு நெறி. அதை என் காதலி நன்ருகப் பயின்று தேர்ந்தவள். அப்படி உணர்ந்த கற்பாகிய தாளேச் செறித்து உடம்பாகிய வீட்டினின் றும் உயிரைப் போகவிடாமல் கிறுத்தி வைத்திருப் பாள். அதுவும் ஒருவகைத் தவம். இந்தக் கானம் எழில் நிரம்பி மலர் குலுங்கத் தோன்றும் தோற்றம் அவளுடைய தவத்தின் நிறைவுக்கு அறிகுறி. ஆகவே, அவள் நான் வருவதை எதிர் நோக்கி நிற்பாள். வண்டுகள் ஒலிக்கும் ஒலியினூடே என் தேர் மணியின் ஒலியையும் கானத்தின் எழிலுாடே இத்தேரின் எழிலேயும் காண வேண்டி நிற்பாள். எவ்வாறு நிற்பாள் தெரியுமா? கவுள்மிசைக் கை ஊன்றி நிற்பாள் : தவம் புரிபவர்களுக்கு நெடுங்காலம் தவம்புரிந்த எய்ப்புத் தோன்ருது ; அது கிறைவேறும்போது தான் மிகுதியான களைப்பு உண்டாகும். பல காவதம் கடந்தவனுக்குக் குறித்த இடம் அணுகியபோதுதான் கால் வலி தெரியும். இவ்வளவு காலம் கற்புத்தாள் வீழ்த்துப் பொறுத்து கின்றவளுக்குக் கார்காலம் வங்துவிட்டதென்று அறிந்தவுடன் அதிகமான சோர்வு உண்டாகும். கானத்தை நோக்கி, அதன் எழிலே நோக்கி நிற்பாள். தன் கன்னத்தில் கையை வைத்து நான் வரும் திக்கை நோக்கி நிற்பாள். நிற்பாள் நிலை : அந்தக் காட்சியை, அவள் நிற்கும் நிலையை, கினைக்கையிலே எனக்கு மயிர் சிலிர்க்கிறது. இவ் வளவு காலம் தன் உயிரைப் போகாமல் தாங்கி, இப் போது, வாடிய கானம் எழில்பெற்று விளங்குவதைப்