பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தகு நிலை 71 இது வரையில் நிதானமாகத்தானே வந்தோம் : இவரும் காட்டின் அழகைப் பார்த்து வந்தாரே. இதற்குள் திடீரென்று இப்படி உத்தரவிடுகிருரே' என்று எண்ணி வீரனைத் திரும்பிப் பார்த்தான். - 'குதிரையின் வேகத்தை இன்று அளந்து காட்ட வேண்டும். இதுவரையில் நீ தாற்றுக்கோலை உப யோகித்ததே இல்லை. அது இங்கே துருப் பிடித்துக் கிடக்கிறது. அதைக்கூட இன்று நீ உபயோகிக்கலாம். எப்படியாவது விரைவில் ஊர் போய்ச் சேர வேண்டும்.' - - பாகனுக்கு வியப்பின்மேல் வியப்பு உண்டாயிற்று. 'பின்னல் வருகிருர்களே, அவர்கள்.....?' என்று கேள்வித் தொனியோடு நிறுத்தினன். அவர்கள் மெல்ல வரட்டும். அவர்கள் போரில் மிகவும் சிரமப்பட்டு கம் மன்னருக்கு வெற்றியை உண்டாக்கினர்கள். அதோடு நெடுந்துாரம் வேகமாக கடந்து வந்திருக்கிருர்கள். அவ்வீரர்கள் வேண்டிய இடத்தில் தங்கி, கச்சையையும் கவசத்தையும் கழற்றி வைத்துவிட்டு இளேப்பாறட்டும். இஷ்டம்போல் இருந்துவிட்டு மெல்ல மெல்ல வரலாம். அவசரம் இல்லை. நான் விரைவிலே போக்வேண்டும். சவுக்கை எடுத்துக் கொள். பாகனுக்கு மயக்கம் தெளியவில்லை. அந்த வீரர் களோடு ஒன்ருகப் புறப்பட்ட படைத்தல்வன் எதற்காக முன்னல் போக வேண்டுமென்று முடுக்கு கிருன் ! தாற்றுக் குச்சியைக்கூட உபயோகிக்கும்படி சொல்லுகிருனே குதிரைகள் என்ன சாதாரணமான வையா! - r வீரர் தலைவன் பாகனது உள்ளத்தை உணர்ந்து கொண்டான். குதிரைகளைக் குழந்தைகளைப் போலப் பாதுகாக்கும் பாகனே, அதுகாறும் தீண்டாத முட் கோலைத் தீண்டி ஒட்டும்படி சொல்லலாமா ? .