பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 காவியமும் ஒவியமும் சொன்னது, தவறுதான். பாகனுக்குத் தன் மன வேகத்தை எப்படி விளக்குவது ? "அங்கே பார் ' என்று தலைவன் சுட்டிக் காட்டினன். . அதுவரையில் தலைவன் கண்கள் அங்த இடத் திலே பதிந்திருந்தன என்பதைப் பாகன் இப்போது தான் உணர்ந்தான். பாகனும் பார்த்தான். அவனுக்கு எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைவனது உள்ளம் அங்கில்லே என்பதை அறிந்தான். அங்கே கண்ட காட்சிதான் என்ன ? மழை பெய்து ஓடிய ஓடையில் மணல் இன்னும் புலரவில்லை. அங்கே காட்டுக் கோழிகள் இரண்டு அங்கும் இங்கும் உலவுகின்றன. ஆண்கோழி கொறக் கொறக்கென்று சத்தமிடுகிறது. உருக்கின நெய்யிலே பாலைத் தெளித்தது போலச் சொட சொடவென்றிருக்கிறது அதன் குரல். பல புள்ளி களையுடைய அந்த ஆண்கோழி அழகாக இருக்கிறது. ஈரமணலேக் கிண்டி ஒரு புழுவைக் கொத்துகிறது. கொத்தின சந்தோஷமோ, பேடைக்குக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமோ, தன் பின்னலே நின்ற பேடையைக் கம்பீரமாகத் திரும்பிப் பார்க்கிறது. அந்தப் பெருந்தகு கிலேயில் தன் கண்ணேச் சிக்கவிட்ட தலைவன் மனம் அந்தக் காட்டைக் கடந்துபோய் வீட்டின் தலைவாசலிலே கிற்கிறது. வீரர் தலைவன் அரசன் ஆணையைச் சிரமேல் தாங்கி உயிரினும் வேறு அல்லாத தன் காதலியைப் பிரிந்து போருக்கு வந்தான். போர் முடிந்தது. அந்தக் கான வாரணம் உணவை ஈட்டிய திருப்தி யோடு பேடைமுன் நிற்பதுபோலத் தானும் வெற்றி ஏந்திய தோளோடு காதலியின்முன் கிற்க விரைவது என்ன ஆச்சரியம் ! - . , , » இனி, பாகன் தாமதிப்பான ? குதிரையைத் தட்டிவிட்டான்.