பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தகு நிலை . 73 தலைவன் கூற்று விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர் அரைச்செறி கச்சை யாப்பழித் தசைஇ, வேண்டமர் நடையர் மென்மெல வருக; திண்டா வைமுள் திண்டி நாம்செலற் கேமதி வலவ, தேரே; உதுக்காண் உருக்குறு நறுநெய் பால்விதிர்த் தன்ன வரிக்குரல் மிடற்ற அந்நுண் பல்பொறிக் காமரு தகைய கான வாரணம், பெயனர் போகிய வியனெடும் புறவிற் புலரா ஈர்மணல் மலிரக் கெண்டி நாளிரை கவர மாட்டித்தன் பேடை நோக்கிய பெருந்தகு நிலையே. -நற்றினை - மருதன் இளநாகனர் பாட்டு. (விரைப்பரி வருந்திய - விரைந்த கடையால் களைப் புற்ற. இளையர் - வீரர். அரைச் செறி கச்சை யாப்பு - இடையிலே செறிந்த கச்சையின் கட்டை. அழித்து - அவிழ்த்து. அசைஇ-இளேப்பாறி. வைமுள் - கூர்மையான முட்கோல். ஏமதி - ஒட்டுவாயாக. வலவ பாகனே. உதுக்காண் - அதோ பார். விதிர்த்தன்ன - தெளித்தாற் போல. கானவாரணம் - காட்டுக்கோழி. பெயனிர் - மழைத் தண்ணீர். புலரா - உலராத . ஈர்மணல் - ஈரமான மணல். மாட்டி - கொன்று.)