பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் சிங்கம் போர்க்களம் என்ருல் அது சாமான்யமான போர்க்களமா ? இருசாரிலும் படைவீரரும் குதிரைப் படையும் யானைப்படையும் தேர்ப்படையும் கடுமை, யாகப் போர் புரிந்தனர். கிலமகள் முதுகு உளுக்கும் படியான போர். தேர்ந்தெடுத்த வீரர் பெருங் கூட்டம் தினவுபெற்ற தோள்களின் வலிமையை உலகு உள்ளளவும் கிலே நிறுத்த முனைந்து வந்திருக் கிறது. படைகளின் பெருமை அவற்றிலுள்ள யானே யின் மிகுதியினலேயே புலப்படுகிறது. யானையை யுடைய பெரும்படையைச் சிதைக்கவேண்டும் என்று ஒவ்வொரு வீரனும் உறுதி பூண்டு முன் கிற்கிருன். யானே அம்பினலே சாயாது; அடியினலே மடியாது. யானேக்கு ஏற்ற படை வேல்தான். - போர்க்களத்தில் பல யானேகளைத் தன் கை வேலால் குத்தி மடிப்பதே வீரத்துள் வீரம் என்று கருதும் தமிழர் வழி வந்தோர் அப்படை வீரர்கள். அப்படி யானைகளே வீழ்த்திவிட்டுத் தாம் இறங் தாலும் பொன்ருப் புகழொடு மாயலாம் என்ற துணிவு அவர்களுக்கு இருக்கிறது. யானேயெறிந்த வீரர்களைப் புலவர்கள் பாடுவார்கள் ; அவர்கள் இறந்தால் வீரக்கல் கட்டுப் பூசிப்பார்கள் அந்தக் கல்லில் பெயர் எழுதிப் புகழ் பரவி இளைஞர்கள் தலை வணங்குவார்கள். யானைப்போர் அவ்வளவு உயர்க் தது, அருமையானது என்பது அவர்கள் கருத்து. போர் நடக்கிறது; யானையும் யானேயும் முட்டு கின்றன; குதிரையும் குதிரையும் இடிக்கின்றன; வீரரும் வீரரும் எதிர்க்கின்றனர். எங்கும் செங் குருதி வெள்ளம். உருண்ட தலையும் அறுந்த தோளும் بن.: , ; و۔ ۔ هُ . . . . ی: $