பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

殉” 1芷 இரண்டைக் கொண்டும் கவிஞன் அமரணச் சிருஷ்டி செய்கிருன்; அசுரனையும் காட்டுகிருன். அழுகை வருகிறது; அதன்பின் இன்பமும் இருக்கிறது. காகரிகப் பண்பு மிக மிக மனிதன் கிரந்தரமான பய னுடைய செயல்களில் ஈடுபடுகிருன். அறிவு கூராக ஆக அவ னுக்கு கித்தியத்துவம் வேண்டுமென்ற ஆசை பிறக்கிறது. உடல் மாண்டு போயும் மாளாது கிற்கும் புகழுக்காகப் போராடுகிருன். எல்லாவற்றையும் மறந்து ஒருமைப் பாட்டின் வழியே இன்பந்துய்க்கக் காரணமான கவிதையை நாடுகிருண். அதற்குமேலும் போய்க் கடவுளது அருளாட் சியிலே புகுந்து இறவாத பெரு வாழ்வு வாழ விரும்புகிருன். முக்தி இன்பத்தைத் தேடி அலைகிருன். இவற்றுள் முக்தி இன்பத்தைத் தேடி ஸர்வ சங்க பரித்தியாகம் செய்வதென்பது எல்லோருக்கும் எளிதான காரியமல்ல. அதற்கு அடுத்தபடியாகக் கவிதையின் மூலமாக ம ன ஒருமைப் பாட்டையும் இன்பத்தையும் அடையும் வழி ஒரளவு மக்களுக்கு எளிதில் கிட்டும்படி அமைந்திருக்கிறது. கவிஞர்கள் என்றும் மாருத நண்பர் களாக கம் அருகிலேயே கிற்கின்றனர். மனம் இருந்தால் கம்பனேடு அளவளாவலாம்; திருவள்ளுவரது அறவுரை யைக் கேட்கலாம் : இளங்கோவடிகளுடைய சிலம் பொலியை நுகரலாம். - இந்தக் கவிதை இன்பத்தை முத்தியின்பத்தை விரும்பிய பெரியோர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக் கிருர்கள். அப்பர் சுவாமிகள் கவிதை இன்பத்திலே மனத்தைச் செல்லவிட்டு யோகத்துயில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடுகிருர். அந்த வழக்கம் உடையவர்களது நெஞ்சில் இருள் நீங்கி ஒளி பாயுமாம் ; சிவபெருமான் திருவருள் பொலியுமாம். இதை எதிர் மறை முகத்தால் அவர் சொல்கிருர் : "சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளே வாங்காதானே' என்பது அவர் திருவாக்கு. மனத்து இருளே வாங்கு வதற்கு ஏற்ற ஒருவகை யோகம் இது. சொல்லிலே பரவிக் கிடக்கும் பொருளே நுகர்ந்து அதன் கண்ணே ஒன்றுபட்டுத் துரங்கவேண்டுமாம். இந்தக் கவிதாயோகம் ராஜயோகம், ஹடயோகம் முதலியவற்றைவிட எளியதுதானே ?