பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii கள்இருக்கும் மலர்க்கூந்தற் சானகியை மனச்சிறையிற் கரந்த காதல் ; உள்இருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி ! மரங்களும் மலேகளும் உருக வாய்கிறந்து அரற்றும் மண்டோதரியின் புலம்பல் நம் உள்ளத்துக்குள்ளே சென்று உருக்குகின்றது, கண்ணிர்கூடத் துளிக்கிறது. ஆம்: நாமும் அழுகிருேம். . முன்னே சொன்ன உண்மையான அழுகையை காம் கேட்கிறபோது நமக்கு வந்த அழுகையும் உண்மையானது. இங்கே மண்டோதரியின் புலம்பலை வாசிக்கும்போது வரும் அழுகை போலி. இந்த அழுகைக்கு அடியில் இன்பம் இருக்கிறது. மெய்யான அழுகையை நாம் மீட்டும் கேட்க விரும்புவதில்லை. அது துன்பத்தை உண்டாக்குவது. காவியத்தில் உள்ள அழுகை மேலும் மேலும் நம்மைக் கவர்கிறது. பல பல தடவை அந்த அழுகையை அணுகி நாம் அழுகிருேம்; சலிப்பில்லாத அழுகை அது க அழுகையை விரும்புவது மாயமந்திர வித்தை அல்லவா? காவியம் அதைத்தான் செய்கிறது. மண்டோதரியின் அழுகை காவியமாக மாற்றப் படும்போது அதன் உருவம் மாறுவதில்லை. ஆணுல் அதன் உயிர் மாறிவிடுகிறது; பயன் கேர் எதிராக அமைகின்றது. கசப்பான சுவையுடைய பாகற் காயைக் குழந்தை விரும்புவதில்லை. சர்க்கரையில்ை பாகற்காய்போல நிறம் ஊட்டி ஒரு மிட்டாய் பண்ணினல் அதைக் குழந்தை மேலும் மேலும் விரும்புகிறது. மனித உலகத்து அழுகைக்கும் காவிய உலகத்து அழுகைக்கும் உள்ள வேறுபாடு இதைப் போன்றதே. . கவிஞனுடைய சிருஷ்டியிலே பலப்ல மூலப்பொருள்கள் இல்லை. உலக சிருஷ்டிக்கு ஆதாரமாக 92 மூலப் பொருள்கள் உண்டென்று விஞ்ஞானிகள் சொல்கிரு.ர்கள். எல்லாம் பஞ்சபூதத்தின் விளைவென்று தத்துவநூல் சொல்கின்றது. காவிய உலகத்தில் மூலப்பொருள் இரண்டே சொல், பொருள். அவற்றைத் தனித் தனியே பிரித்துச் சொல்வதுகூடப் பிழை. சொல் என்ருலே பொருளும் உள்ளடங்கித்தான் இருக்கிறது. சிவமும் சக்தியும் அபேதமாக நிற்பதுபோலச் சொல்லும் பொருளும் ஒன்று பட்டு விற்கின்றன. சொல் இன்றிக் கவிப் பிரபஞ்சத்தில் பொருள் இல்லை : பொருள் இன்றிச் சொல் இல்லை. இந்த