பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii பாலைவனம் கவிஞனது காவிலே புகுந்து வரும்போது இனி மையைப் பெற்றுவிடுகிறது. மற்ருேர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு மடமங்கை தன் நாயகனே இழந்து அழுகிருள். உலகில் அத்தகைய துர்ப்பாக்கியவதிகளைக் காணும்பொழுது நம் உள்ளம் கரைகிறது. அவளது அழுகை கம்முடைய கண்ணிலும் நீர் சுரக்கச் செய்கிறது. அவள் துக்கத்தை நாமும் பங்கிட்டுக் கொள்கிருேம். இறந்து போனவன் எவ்வளவு கொடி யவகை இருந்த போதிலும் அந்த மெல்லியலாளுக்கு உண்டான பெருந்துயரத்திலே காம் ஆழ்ந்து போகிருேம். கம்பன் சிருஷ்டிசெய்த காவிய உலகத்திலே புகுந்து பார்க்கலாம். ராவணன் ராமன் கை அம்புக்கு உயிர் கொடுத்து மாண்டு கிடக்கிருன் விபீஷணன் பார்த்துக் கதறுகிருன்: உண்ணுதே உயிர் உண்ணு தொருநஞ்சு சனகிஎனும் பெருநஞ் சுன்னேக் கண்ணுலே நோக்கவே போக்கியதே உயிர்நீயும் களப்பட் டாயே ! எண்ணுதேன் எண்ணியசொல் இன்றினிதா எண்ணுதியே எண்ணில் ஆற்றல் அண்ணுவோ அண்ணுவோ அசுரர்கள்தம் பிரளயமே ! அமார் கூற்றே ! கவியைப் படிக்கிறபொழுதே விபீஷணன் கதறுவது கம் காதில் கேட்கிறது. அண்ணுவோ ! அண்ணுவோ ! என்று சொல்லிப் புலம்பும் புலம்பல் காலத்தைக் கடந்து இடத்தைக் கடந்து இன்று கம் உள்ளத்தின் காதுக்குக் கேட்கிறது. ஆஹா 1 அசுரர்கள்தம் பிரளயமே ' என்ற தொடரில் விபீஷணன் உள்ளத்தின் வேதனையைக் கொட்டி விடுகிருனே ! மண்டோதரி வருகிருள். உடம்பெல்லாம் சல்லடைக் கண்ணுகத் துளைக்கப்பட்டுக் கிடக்கும் ராவணனைப் பார்க்கிருள். வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள் இருக்கும் இடன்இன்றி உயிர் இருக்கும் இடன்நாடி - இழைத்த வாருே ! -