பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் சிங்கம் 75 வெட்டிய காலும் துணிபட்ட குதிரையும் கிடக் கின்றன. யம கிங்கரர்களின் வருங்கால சந்ததி களுக்குச் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்து விளையாடுவதற்கு ஏற்ற இடம்போல விளங்குகிறது. அக்களம். பேய்க்கும் கழுகுக்கும் கரிகளுக்கும் வயிருர விருந்தளிக்கும் அந்தக் களத்திலே வீரம் தாண்டவமாடுகிறது. அந்தக் கூட்டத்தில் ஒரு வீரன் பம்பரம்போல் சுழன்று திரிகிருன். அவன் வீரக்குடியிலே பிறந் தவன். அவனுடைய தாய் பாலூட்டுகையிலேயே வீரத்தையும் கரைத்து ஊட்டி யிருக்கிருள். 'ஆயிரம் வீரர்களைக் கொல்வதைவிட ஒர் யானையை எறிந்து வீழ்த்துவதுதான் வீரம். நீ போர்க்களத்தில் இறந்து போனலும் பல யானைகளைக் கொன்றுவிட்டுப் பிறகே மார்பில் புண்பட்டு வீழ்ந்தாயென்று அறிந்தால் நான் உன்னைப் பெற்ற பெருமையைப் பாராட்டி உயிர் விடுவேன்” என்று அந்த மறக்குடிப் பெண் அவ னுக்கு உபதேசம் செய்திருக்கிருள். தன் தாயின் வார்த்தைகள் அவனுக்குப் பொருள்படும் பருவம் வங்த காலத்தில் அவன் அறிந்த செய்திகள், கதைகள் எல்லாம் களிறு எறிந்த வீரர் கதைகளே. 'ஆண் சிங்கம் ஆண் சிங்கம் என்று சொல்லுகிருர்களே, ஏன் தெரியுமா ? பிடரி மயிரும் எடுத்த பார்வையும் மாத்திரம் சிங்கத்தின் லக்ஷணத்தைத் தந்து விடு மென்று எண்ணுதே. பருமனக வீங்கிய உடம்பை யுடைய யானையைக் கிழித்து வீழ்த்தி விடுவதுதான் சிங்கத்துக்குப் பெருமை. யுேம் சிங்கக்குட்டி யென்று பேரெடுக்க வேண்டுமானல் போரில் யானைகளுக்கு எமனுக விளங்குவாயாக இந்தா, பிடி இந்த வேலை; இதுதான் உன்னுடைய மூதாதையர் வைத்திருக்கும் சொத்து. இந்த வேலால் யானைகளே எறிந்து உண்மை யான சிங்கமாகப் புகழடையவேண்டும்' என்று தன்னே வாழ்த்திப் போர்க்களத்துக்கு அனுப்பிய தாயின் வீர உரையை அவன் மறக்கவில்லை.