பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - காவியமும் ஒவியமும் அந்த வேலைச் சுழற்றிக்கொண்டு திரிகிருன். நல்ல வேளேயாக, பகைப் படையின் தலைவனுக்கு உரிய யானையே எதிர்ப்பட்டது. அதனேக் குறி பார்த்துத் தன் நெடிய வேலே எறிந்தான். அதன் பெரிய உடலில் அது பாய்ந்து தங்கிவிட்டது; ரத்தம் குபிரென்று அருவிபோலப் பீச்சி அடித்தது. இனி அந்த யானே அடுத்த உலகத்திற்குப் போக வேண்டியதுதான். இப்போது வீரனுக்கு ஒரு கவலே வந்துவிட்டது. 'நம்முடைய கைவேலை யானைமேல் வீசினேம்; அதன் உடலில் அது தங்கிவிட்டது. நம் கையில் இப்போது ஆயுதம் ஒன்றும் இல்லையே! எதைக் கொண்டு போர் செய்வது ? என்று ஒரு கணம் ஏங்கினன். தன் திரண்ட தோளேயும் மார்பையும் பார்த்துக் கொண் டான். மார்பிலே பார்வை சென்றபோது அவன் துள்ளிக் குதித்தான். யானையை வீழ்த்துவதற்காக வங்த வேகத்தில் எதிர்ப்படையில் இருந்த வீரன் அவன் மார்பிலே தன் கைவேலை வீசி எறிந்தான். அது யானேபோன்ற அவன் மார்பிலே தைத்தது. ஒரே ஆத்திரத்தோடு யானைமேல் பாயும் அவ்வீரன் அதனே அகாயாசமாக ஏற்றுக்கொண்டு வேகம் குறை யாமலே போய்த் தன் காரியத்தை முடித்தான். தன் மார்பில் பாய்ந்த வேலே அந்த வேகத்தில் மறந்தான். இப்போது அந்த வேல் அவன் கண்ணிற்பட்டது. அவனுக்கு எவ்வளவு குது.ாகலம் தெரியுமா ? அம்பருத் துாணியிலிருந்த அம்பை யெல்லாம் பிரயோகம் செய்துவிட்டு மேலே அம்பில்லாமல் வெறுங்கையோடு கின்ற வீரனுக்கு அந்தத் துணி நிறைய அம்புகளே வைத்தால் எப்படி இருக்கும், அப்படி இருந்தது அவனுக்கு. அவனுக்குக் கிடைத்த வேல் யாசித்துப் பெற்றதா ? இல்லை. பகைவன் எறிந்த வேல். அவனுடைய இரும்பு திரண்டனைய உடம்பில் சிறிதளவே புகுந்து பதிந்துகின்றது; அவ்வளவுதான். அதைத் துளேக்க முடியவில்லே. אי