பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் சிங்கம் 77 பார்த்தான் வீரன்; வெடுக்கென்று மார்பினின்று அதைப் பறித்தான். வலியை மறந்தான். சரியான சமயத்தில், தான் கிராயுதபாணியாக இருந்த செவ் வியில், உதவிய அந்த வேலைப் பார்க்குங்தோறும் அவன் உள்ளம் மகிழ்ந்தது. அவனுடைய மார்பாகிய உறையினின்றும் அந்த வேல் வெளிப்பட்டபோது அவன் நெஞ்சாகிய உறையிலிருந்து மகிழ்ச்சியும் வீரமும் வெளிப்பட்டன. ஆயுதம் பெற்றதால் மகிழ்ச்சியும் பகைவன் வேலை அலகங்யமாக ஏற்றுக் கொண்ட பெருமையால் வீரமும் பொங்கி வழிய அந்த ஆண்சிங்கம் வேலைச் சுழற்றிக்கொண்டு அடுத்த யானையைத் தேடிப் பாய்கிறது. "கைவேல் களிற்ருெடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்.” . . . . -குறள். (போக்கி - செலுத்தி. மெய்வேல் - தன் உடம்பிலே தைத்த வேலே. பறியா - பறித்து. நகும் - மகிழ்வான்.)