பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே யானை! ன்ென கொண்டாட்டம் ! என்ன விளையாட்டு ! குழந்தைகள் யானையை யானேயென்ரு எண்ணியிருக் கிருர்கள் ? இல்லவே இல்லை. மரயானையை வைத்துக் கொண்டு விளையாடுவது போலல்லவா விளையாடு கிருர்கள்? தண்ணிரில் நிற்கும் யானையின் மத்தகத்தி லிருந்து கொம்மாளம் போடுகிருர்கள். யானே குளிக் கிறது; அதுவாகக் குளிக்கிறதா ? குளிப்பாட்டுகிருர் களா? குளத்திலே மண்டியிட்டு முதுகு முழுகக் குளிக் கிறது. குழந்தைகள் தங்கள் சிறுகையால் ஜலத்தை வாரி வாரி அதன் முகத்தில் இறைக்கிருர்கள் ; அதன் தந்தத்தைக் கழுவுகிருர்கள். யானே தன் தும்பிக்கை யினல் நீரை வாரி முகத்தில் வீசிக் கொள்கிறது. குழங்தைகளின்மேல் அந்த நீர்த்துளிகள் வீசும்போது அவர்கள் பேரின்பத்தை அடைகிருர்கள். யானையைத் தேய்த்துக் கழுவுகிருர்கள். அவர்கள் அதைக் குளிப் பாட்டுகிருர்கள். அது அவர்களேக் குளிப்பாட்டுகிறது. இந்த நீர் விளையாட்டிலே அந்த யானைக்குக்கூட மட்டற்ற மகிழ்ச்சி இருக்கிறது என்றுதான் தெரிகிறது. இல்லாவிட்டால் குழந்தைகளின் விளை யாட்டுக்கு இடங்கொடுத்துக்கொண்டு அது கிற்குமா? இப்படி ஊரிலுள்ள குறுமாக்கள் (சிறு பையன் கள்) தன் வெள்ளிய தந்தத்தைக் கழுவுதலால் மகிழ்ந்து போய் ர்ேத்துறையிற் படியும் பெருங் களிற்றை ஒளவை பார்க்கிருள். அவளுக்குத் தூக்கி வாரிப்போடுகிறது! அப்போது அவள் கண்ட காட்சி யால் அல்ல ; அந்தக் காட்சியையும் சில காலத்துக்கு முன் அவள் அறிந்த காட்சியையும் அவள் மனசிலே ஒப்பிட்டுப் பார்க்கிருள். அப்போதுதான் அவளுக்குத் திடுக்கிடுகிறது.