பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதே யானை! 79 அடேயப்பா! அன்றைக்கு எத்தனே தடபுடல் : என்ன குழப்பம்! எத்தனே கவக்ல்! ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டல்லவா கின்றது? யானே : யொன்று மதம் பிடித்து அடக்குவாரின்றி ஊர் முழு வதும் அலைந்து திரிந்து மரங்களே முறித்தும் கரையைப் பிய்த்தும் மதிலோடு மோதியும் கதவினக் குத்தியும் வெடிபடப் பிளிறியும் இடிபட உலவியும் பண்ணிய கொடுமையை இன்னும் ஊரார் மறக்க வில்லையே. அதே யானே இன்று சாதுவாகவும் சிறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருளாகவும் ர்ேத் துறையில் நிற்கிறது ! - ஒளவைக்கு ஏன் ஆச்சரியம் - உண்டாகாது? அந்தக் காலத்தில் அதனருகில் யாராவது போக முடிந்ததா ? துன்னருங் கடாம் (அணுகுதற்கரிய மதம்) ஏறியிருந்தது. அதே யானேதான் இது என்பதை யாரும் நம்ப முடியாது. ஒளவைக்கு இந்தக் காட்சியைக் காணக்காண வியப்பு மேலிட்டது. இது குழந்தைகளின் பெருமையா ? யானேயின் இயல்பா? யோசித்து யோசித்துப் பார்த்தாள் தமிழ்ப் பாட்டி. நிச்சயமாக யானேயின் இயல்புதான் என்று தெரிந்தது. * இந்த அதிசயத்தை நினைந்தபடியே அவள் அதிய மான் அரண்மனையை அடைந்தாள். அதியமான் தக டுரில் அரசாண்ட சிற்றரசன் , பெருவீரன். அவன் பல போரில் பகைவர்களைப் புறங்காட்டி ஓடச்செய்து வெற்றி பெற்றவன். போர்க்களத்தில் ருத்திரமூர்த்தி போல நின்று பகைவருடைய யானைப்படையையும் தேர்ப் படையையும் பிற படைகளையும் கொன்று குவித்துக் கொற்றவைக்கு விருந்திடுபவன். " * ஒளவைப்பாட்டி அவன் திருவோலக்கத்தை அடைந்தபோது புலவர் பலர் அவனுடைய வீரச் சிறப்பைப் பாராட்டிக்கொண் டிருந்தனர். சிங்கம் போலவும் புலிபோலவும் அவன் போர்க்களத்தில்